chennireporters.com

#Cuddalore SP Jayakumar; மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம். ஓபன் மைக்கில் பேசிய கடலூர் எஸ்.பி. ”அசிங்கப்பட்ட காக்கிகள்”.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் லாட்டரி விற்பனை விவகாரத்தில் மாமுல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம் என ஓபன் மைக்கில் எஸ்பி வெளுத்து வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி நசீர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தார் இதற்கு போலீசார் உடந்தையாக இருந்ததாக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் வரை புகார் சென்றது. அதனைத்தொடர்ந்து கடலூர் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி தனிப்படை போலீசார் நசீரை கைது செய்தனர்.Witness in the Corridors Bureaucracy News: Asra Garg IPS has been transferred as IG, North Zone Tamil Nadu Police

ஐஜி (தென் மண்டலம்) அஸ்ரா கார்க்.

இதில் போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை காவலர்கள் வரை பல லட்சம் ரூபாய் மாமூல் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு உட்பட ஏழு பேர் வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு திட்டக்குடி உள்ளிட்ட ஏழு உட்கோட்ட காவல் அதிகாரிகளையும் மைக்கில் அழைத்து எஸ்.பி ஜெயக்குமார் கடிந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் சிதம்பரம் பகுதியில் காலம் காலமாக லாட்டரி விற்பனையில் போலீசார் மாமுல் வசூலித்து வந்தது தெரிய வருகிறது. இது விதிவிலக்கா ஒரு சில அதிகாரிகள் மட்டுமே நேர்மையாக பணியாற்றி வருகின்றனர். இனியும் லாட்டரி விற்பனையாளர்களிடம் தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள்.Way2News Tamil

கடலூர் எஸ்பி ஜெயக்குமார்.

லாட்டரி கஞ்சா விற்பனைக்காக மாமுல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம் என கடுமையாக எச்சரித்தார். போலீசாரை எஸ்பி மைக்கில் இப்படி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சில நேர்மையான உளவுத்துறை அதிகாரிகள் ஜெயக்குமார் சென்னை புறநகர் ஏடிஎஸ்பியாக இருக்கும் பொழுது பல விஷயங்களில் லட்சக்கணக்கில் மாமூல் வாங்கியதை யாரிடம் சொல்வது? போதைப் பொருள் வழக்கில் அதாவது குட்கா வழக்கில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் ஜெயக்குமார் பெயரும் இடம் பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் போலீஸ் அதிகாரிகள் பலரின் பெயர்கள் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தற்போதும் நிலுவையில் உள்ளது. இவரே நேர்மையாக இல்லாத போது மற்றவர்களை இவர் ஓபன் மைக்கேல் பேசியது எந்த வகையில் நியாயம் என்று சில காக்கிகளின்  மைண்ட் வாய்ஸ் சொல்கிறது.கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது | Tirupathur News A person who sold banned Kerala state lottery tickets in Tamil Nadu was arrestedசேலையூர் காவல் நிலையத்தில் பிரபல டைல்ஸ் தொழிலதிபரியின் மகள் காதல் விவகாரத்தில் பல லட்ச ரூபாய் கைமாறிய சம்பவம் ஜெயக்குமார் சர்வீசில் அழிக்க முடியாத கருப்பு பக்கம் என்கின்றனர் சில காவல்துறை அதிகாரிகள்.Sale of number 3 lottery tickets at the grocery store | மளிகை கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனைஐஜி வரை இந்த விஷயம் சென்றதனால் தான் தற்போது இவர் இப்படி பேசுகிறார். ஆனால் ஏற்கனவே இவருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக பல செய்திகள் தெரியும் என்கின்றனர் சில உளவுத்துறை அதிகாரிகள். வலிய வந்து மாட்டிக் கொண்டு சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொண்ட செய்தி இதுதான் என்கின்றனர் சில கடலூர் மாவட்டத்தில் பணியாற்றிய வரும் அதிகாரிகள். ஜாங்கிட்டிடம் கேட்டால் ஜெயகுமாரின் பல கட்டிங் வாங்கிய செய்திகள் தெரியவரும் என்கின்றனர் பழைய சென்னை புறநகர் உளவுத்துறை அதிகாரிகள்.

 

 

இதையும் படிங்க.!