chennireporters.com

மிஸ் தாய்லாந்தாக தேர்வு செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளியின் மகள்.

இரு தினங்களுக்கு முன்னர் இணையதளத்தில் வெளியான இந்த புகைப்படம் தான் தற்போது உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2015 ம் ஆண்டு மிஸ் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான கஹானித்தா மின்ட் பாசாங் என்னும் பெண் வெற்றிபெற்று அழகு ராணியாக முடிசூடிக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவரது அம்மா அவர் கலந்து கொள்ள முடியவில்லை காரணம் அவர் குப்பைகளை பொறுக்கும் வேலை செய்து வருகிறார்.

கஹானித்தா மின்ட் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்.

இது குறித்த புகைப்படம் தற்போது தான் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல பல நாட்டு மக்களையும் உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அழகியின் அம்மா பல வருடங்களாக குப்பைகளை பொறுக்கும் வேலையையும் தொட்டிகளை கழுவி சுத்தம் செய்து கிடைக்கும் பணத்தில் தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார்.

கடுமையாக கஷ்டப்பட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியமைக்கு நான் நன்றி சொல்லும் விதமாகவே என் அம்மா காலில் விழுந்தேன் என்று “கஹானித்தா மின்ட்”
தெரிவித்துள்ளார்.

பணம், பெயர், புகழ் கிடைத்தால் பெற்றவர்களை மறந்து விடும் நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான பிள்ளைகள் மத்தியில் இப்படியும் ஒரு மனிதநேயம் உள்ள மகள் உலகத்தில் இருக்கிறாள்.

நாமும் வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டுவோம்! வாழ்க அம்மாவின் புகழ். வாழ்க கஹானித்தா மின்ட்

இதையும் படிங்க.!