chennireporters.com

#dead officer and looted several lakhs; செத்துப்போன அதிகாரி பெயரில் போலி கையெழுத்து போட்டு பல லட்சம் கொள்ளையடித்த புழல் பிடிஓ ஆபிஸ் அதிகாரிகள்.

#exclusive story #special story

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊழலுக்கும் ஃபிராடுத்தனத்திற்கும் பெயர் போன புழல் பிடிஓ அலுவலக அதிகாரிகள் இரண்டு வருடத்திற்கு முன்பு செத்துப்போன அதிகாரி பெயரில் போலி கையெழுத்து போட்டு பல லட்ச ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நமது அலுவலகத்திற்கு புழல் பகுதியை சார்ந்த அறப்போர் இயக்கத்தினர் ஒரு புகார் கடிதம் அனுப்பி இருந்தனர். அந்த கடிதத்தில் மாதாவரம் நெடுஞ்சாலை கிராண்ட்  லைன் பகுதியில்  அமைந்துள்ளது பாப்னா என்கிற மாத்திரை தயாரிக்கும் கம்பெனி.

 

கிராண்ட் லைன் பகுதியில் இயங்கி வரும் இந்த நிறுவனம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 70 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து தங்களது அலுவலகத்திற்காக பயன்படுத்தி வருகிறது.

அது தவிர அந்த கம்பெனி பல கட்டிடங்களை அந்த காம்பவுண்டில் கட்டி உள்ளது. 30/3,  30/4,  30/5, 30/6, 30/7 என ஐந்து சர்வே எண்களில் புதிதாக ஒரு கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு புழல் பிடிஒ அலுவலகத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அப்போது இருந்த அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தனர். அதாவது 2021,2022,2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் தொடர்ந்து CMDA PLANNER ஆல் நிராகரிக்கப்பட்ட BAFNA PHARMACEUTICAL நிறுவனத்தின் ஃபைலை தற்போது திடீரென இரண்டு மாதத்திற்கு முன்னர் எப்படி PERMIT கொடுக்கப்பட்டது.

காரணம் சிஎம்டிஏ வில் இந்த கம்பெனி தொடர்பாக பல்வேறு புகார்களும் விதிமுறை மீறல்களும் இருந்ததால் கூடுதல் கட்டிடம் கட்ட அனுமதிக்க முடியாது என்று நிராகரித்து ஃபைலை கிடப்பில் வைத்திருந்தனர். ஆனால் மேற்படி பாப்னா மாத்திரை கம்பெனி நிர்வாகம் தொடர்ந்து பல அழுத்தங்களை கொடுத்து கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு முயற்சித்தனர்.

ஆனால் மீண்டும் அதிகாரிகள் அவர்களது விண்ணப்பத்தை நிராகரித்தனர். 60 ஆயிரம் சதுர அடி கட்டிடம் கட்ட அனுமதி கேட்ட நிறுவனம் கொடுத்த விண்ணப்பத்தை நிராகரித்த அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் ஃபைலை நிரந்திரமாக கிடப்பில் போட்டனர். இந்த நிலையில் சிஎம்டிஏ வில் இளங்கோவன் என்கிற பிளானர் பணியாற்றி வந்தார்.

Bafna Pharma - India's Leading Pharmaceutical CompanyBafna Pharma - India's Leading Pharmaceutical Company

இளங்கோவன் கடந்த 2022ம் ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் இறந்து போனார். இந்த நிலையில் மூன்று மாதத்திற்கு முன்பு புழல்  பிடிஒ ஆபிஸ் அதிகாரிகள் பாஃனா மாத்திரை கம்பெனி நிறுவனத்திடம் இருந்து பல லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு இறந்து போன சிஎம்டிஏ பிளானர் இளங்கோவன் பாப்னா நிறுவனம் கட்டிட கட்ட அனுமதி கொடுத்து ஃபைலை சரி செய்து 60 ஆயிரம் சதுர அடி கட்டிடம் கட்ட இளங்கோவன் கையெழுத்து போட்டு கொடுத்ததைப்போல  இறந்து போன இளங்கோவனின் கையெழுத்தை புழல் பிடிஒ ஆபீஸ் அதிகாரிகள் சிலர் அவர்களாகவே கையெழுத்து போட்டு போலியாக ஸ்டாம்ப் பேடையும் தயார் செய்து பாப்பனா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளனர்.

Bafna Pharma - India's Leading Pharmaceutical Company

மூன்று மாதங்களுக்கு முன்புதான் பாப்னா நிறுவனம் அரசு கட்டணத்தையே கட்டியுள்ளது. ஏற்கனவே நீண்ட நாட்களாக ஒன்றிய குழு கூட்டத்தை கூட்டாத நிர்வாகம் ஏற்கனவே கூட்டப்பட்ட கூட்டங்களிலும் பாப்னா நிறுவனத்தின் கட்டிட அனுமதி தொடர்பான தீர்மானத்தை முன் வைக்கவில்லை.

திமுக சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால்

சத்தம் இல்லாமல் பல லட்ச ரூபாய் பணம் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் காதும், காதும் வைத்ததைப் போல பாப்னா நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்துள்ளனர். ஏற்கனவே 70 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி வைத்திருக்கும் நிறுவனத்தின் மீது மாவட்ட வருவாய் நிர்வாகமும் அல்லது பிடிஒ ஆபீஸ் அதிகாரிகளோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காரணம் அதிகாரிகளுக்கு பாஃப்னா நிறுவனம் போடும் பிச்சை காசில் தின்று கொழுத்த ஃபிராடு அதிகாரிகள் அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி வைத்திருப்பது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வழங்கப்பட்ட அதாவது போலி கையெழுத்துப் போட்டு திருட்டுத்தனமாக வழங்கிய அனுமதி கடிதத்திற்கு அதிகாரிகளும் திமுக சேர்மன் தங்கமணி திருமால் பெற்ற லஞ்சப்பணம் பல லட்சங்களை தாண்டும் என்கின்றனர் புழல் ஒன்றிய திமுக வினர்.

 

புழல் பிடிஒ அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் லஞ்சமும் திமுக ஒன்றிய சேர்மன் தங்கமணி திருமாலுக்கு ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் வீதமும் லஞ்சம் வழங்கப்பட்டதாக சொல்லுகிறார்கள் பாப்னா நிறுவன அதிகாரிகள்.

Photo

சட்டத்திற்கு  எதிராக பிராடுத்தனம் செய்து போலி கையெழுத்துப் போட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து போலி கையெழுத்துப் போட்ட அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கின்றனர் எதிரணியினர்.

 

திமுக சேர்மன் தங்கமணி

அது தவிர சம்பந்தமே இல்லாத சில பிராடுகள் புரோக்கர்கள் சிலர் புழல் பி டி ஓ அலுவலகத்தில் பல முக்கிய விஷயங்களை நாங்கள் செய்து தருகிறோம் என்று பலர் லட்ச ரூபாய் பலரிடம் லஞ்சமாக பெற்றுள்ளதாகவும் ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சி கவுன்சிலர்களின் கோப்புகளை திருடி தனது காரிலும் தனது வீட்டிலும் மறைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறார்கள் திமுக உடன் பிறப்புகள் சிலர்.

யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்பது தொடர்பாக நமது அலுவலகத்திற்கு வந்திருக்கும் கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் செய்தியை நீதிமன்றத்திற்கு நாம் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

புழல் பிடிஒ அதிகாரிகள் செய்துள்ள பல முறைகேடுகள் பற்றி இது வரை மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எருமை மாட்டின் மீது மழை பெய்ததைப்போல இருக்கிறது என்கின்றனர் பொது மக்கள்.

இதையும் படிங்க.!