chennireporters.com

#DMK Arakkonam Constituency MP missing; அடிப்படை வசதிகள் இல்லாத ரயில் நிலையங்கள், காணாமல் போன திமுக அரக்கோணம் தொகுதி எம்பி.

#சிறப்பு செய்தி #அரக்கோணம் திமுக எம்.பி. #ஜெகத்ரட்சகன்… #புலம்பும் பொதுமக்கள்.

இருக்கிறாரா ! இல்லையா?? இருந்தா வரச் சொல்லுங்க!!! ஓட்டு போட்ட மக்களை கொஞ்சம் நினைக்கச் சொல்லுங்க என்ற அளவுக்கு இருக்கிறது அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் செயல்பாடுகள்.

அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொகுதியில் காட்பாடி முகுந்தராயபுரம் வாலாஜா ரோடு அரக்கோணம் போன்ற முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது.Dmk Mp Jagathrakshakan,திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்..! அமலாக்கத்துறை நடவடிக்கை - ed seizes properties of dmk mp jagathrakshakan and his family members - Samayam Tamil

திமுக எம்பி ஜெகத்ரட்சகன்.

குறிப்பாக நாள் ஒன்றுக்கு வந்து ஐந்தாயிரம் மேற்பட்ட பொதுமக்கள் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் பணிக்காக வந்து செல்கின்றனர் ஆனால் இந்த ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது குறிப்பாக தானியங்கி படிக்கட்டுகள் நடைமேடைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை மேலும் நடை மேம்பாலம் குடிநீர் வசதி கழிவுநீர் அறைகள் போன்ற எந்தவித பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்தவித பணிகளும் இல்லாமல் இருக்கிறது. இந்த ரயில் நிலையம் பாழடைந்து காடு போல காட்சி அளிக்கிறது. பயணிகள் உட்காருவதற்கு கூட இருக்கைகள் இல்லாமல் இருக்கிறது.Mukundarayapuram Railway Station | MCN | Mukundarayapuram | मुकुंन्दरायपुरम | முகுந்தராயபுரம் | SRராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டை நெல்லிக்குப்பம் செகண்ட் ப்பேஸ்,  பெல், சிப்காட்,  திருவலம் உள்ளிட்ட பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இயங்கி வருகிறது. இந்த கம்பெனிகளில் ஒரு லட்சத்திற்கும் பேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தையே நம்பி உள்ளனர். இவர்களை பற்றி  அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன்  நினைவு கொள்ளவேண்டும். இந்த ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வந்து செல்வதற்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. Indian Express Train Crossing Mukundarayapuram Railway Station, Ranipet, Tamil Nadu, 632406, Indiaஒவ்வொரு நாளும் மரண பயத்தில் தான் வாழ்கிறோம் என்கிறார் ராணிப்பேட்டை அருகே உள்ள  அவரக்கரை கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவர். ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த ராதிகா என்ற பெண் எனக்கு 48 வயதாகிறது . நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்து இந்த ரயில் நிலையம் இதே நிலமையில் தான் இருக்கிறது . எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது என்கிறார். அவரக்கரை கிராமத்தை சேர்ந்த உலகநாதன்

அது மட்டும் இல்லாமல் பயணிகள் டிக்கெட் பெற்றுக் கொண்டு தண்டவாளங்களை கடந்து தான் ஒன்றாம் நடைமடைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சீர்படுத்தி விடுவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக எம்பி ஜெகத்ரட்சகன் காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா ரோடு, சோளிங்கர், அன்வர்த்திகான்பேட்டை, அரக்கோணம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் எந்த விதமான பணிகளையும் செய்யாமல் இருக்கிறார். அவர் அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கிறது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் மட்டும் ஒரு சில பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவும்  கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது.Walajah Road Railway Station Forum/Discussion - Railway Enquiryமேலும் வாலாஜா ரயில் நிலையத்திலும் தானியங்கி படிக்கட்டுகள் நடைமேடைகள் குடிநீர் வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் நடைமேம்பாலம் சிதிலமடைந்து காணப்படுகிறது. எந்த நேரத்தில் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது.  Arakkonam Railway Station Forum/Discussion - Railway Enquiryகுறிப்பாக பொதுமக்கள் மற்றும்  வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லக்கூடிய அளவிற்கு மோட்டார் வாகனங்கள் தானியங்கி வண்டிகள் கூட  இல்லை. அரக்கோணம் ரயில் நிலையம் சென்னை பெங்களூர் மார்கத்தில்  முக்கிய ரயில் நிலையமாக கருதப்படுகிறது . அந்த ரயில் நிலையத்தில் இலவச கழிப்பிடங்களை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஐந்தாம் நடைமேடையில்   ஒரு கட்டண கழிப்பிடம் இருப்பதால் பொதுமக்கள் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அது சுத்தமாக இல்லாமல் இருப்பதால் நோய்த்தொற்று பரவும் ஆபாயம் உள்ளது.  3ம் நடைமேடையில் உள்ள கழிப்பிடமும் தூய்மையாக இருப்பதில்லை. ஒவ்வொரு நடைமேடைகளிலும் இலவச மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தக்கூடிய வகையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் அமைக்கவேண்டும் என்கின்றனர். அது மட்டுமல்லாமல் அவர் ஒரு முறையாவது அரக்கோணம் ரயில் நிலையம் வந்து ஆய்வு செய்யவேண்டும் அப்போது தான் உண்மை நிலை தெரியும் என்கின்றனர் பொது மக்கள்.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மூன்றாவது முறையாக இந்த பகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பெரிய தொழிலதிபராக இருப்பதால் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றி அவர் நினைத்துப் பார்க்க மாட்டார். அவர் நினைத்து பார்க்க நேரமில்லாதவர்.அது மட்டும் இல்ல திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். கருணாநிதியின் புகழ் பாடியே அவர் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டவர் என்பதால் கட்சித் தலைமை அவரிடம் எந்த விளக்கமும் கேட்காது. மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிப்பார்களா அந்த பகுதியில் பெரும் வாக்கு சரிவு ஏற்படும் என்ற நிலை இருந்தும் கூட மக்கள் பணி செய்யுங்கள் என்று முதல் அமைச்சர் அவரை வலியுறுத்த மாட்டார் என்கிறார்கள் அந்த பகுதியை சேர்ந்த மூத்த திமுக நிர்வாகிகள்.அது மட்டுமல்லாமல் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அவர் தனது சமூக மக்களை தேர்தல் நேரத்தில் அரவணைத்து அவர்களுக்கு தேவையான பணத்தை கொடுத்து வெற்றியை பெற்று விடுவதில் அவர் மிகச்சிறந்த கில்லாடி என்கின்றனர்.திமுக எம்பி ஜெகத்ரட்சகன், குடும்பத்துக்கு 908 கோடி ரூபாய் அபராதம்.. அமலாக்கத்துறை அதிரடியின் பின்னணி | DMK MP Jagathrakshakan and his family fined Rs 908 crore by ...அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள் அந்த கிராமத்திற்கு தேவையான முக்கிய பணிகள் அந்த பணிகளுக்கு தேவையான நிதி உதவிகள் என அனைத்தும் தருவதால் அவர் எளிதில் வெற்றிபெற்று விடுகிறார் என்கிறார்கள். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி படிக்கட்டுகள் இலவச கழிப்பிடங்கள் குடிநீர் வசதிகள் தரமான நடை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்கின்றனர் ஜெகத்ரட்சகனுக்கு ஓட்டு போட்ட பொதுமக்கள்.

இது குறித்து  அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!