Chennai Reporters

மாநிலங்களவை உரிமை மீறல் குழு உறுப்பினராக தி.மு.க எம்.பி பி.வில்சன் நியமனம்.

 தி.மு.க எம்.பி பி.வில்சன்

மாநிலங்களவை உரிமை மீறல் குழு உறுப்பினராக மூத்த வழக்கறிஞரும் தி.மு.க எம்.பியுமான பி. வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவை இணை செயலாளர் சுரேந்திர குமார் திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில்,
மாநிலங்களவையின் மாற்றி அமைக்கப்பட்டுள்ள உரிமை மீறல் குழுவிற்கு பத்து எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க வை சேர்ந்த எம்.பி பி.வில்சன் மற்றும் ஸ்ரீஹரிவான்ஸ், அனில் ஜெயின், குமார் கேதார், சுஜித்குமார், நரசிம்மராவ், சரோஜ் பாண்டே, அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் சின்ஹா, சுதன்சு திரிவேதி ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தி.மு.க எம்.பி வில்சன் மாநிலங்கள் அவை உரிமை மீறல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .பி.வில்சன் இவர் ஏற்கனவே தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!