#doctors advise against eating processed foods ; பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது மருத்துவர்கள் அறிவுரை.

June 26, 2026

By இரா. தேவேந்திரன்.

நீங்கள் மீன் பிரியரா கவனமாக இருக்கவும் , உங்களுக்கான பதிவு தான் இது.

இனிமேல் நீங்கள் மீன் வாங்கும் போது மீன் பிடித்து எத்தனை நாட்கள் ஆகிறது. கெமிக்கலில் பதப்படுத்தப்பட்டதா என்று கேட்டு வாங்கவேண்டும்.  மீனின் செவில் பகுதி மற்றும் மீனின் நடுப்பகுதியை பிடித்துப்பார்த்தால் நீங்கள் வாங்கும் மீன் பழைய மீனா அல்லது புதிய மீனா என்று எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் என்ற கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் கம்பெனியில் அமோனியா கசிவு ஏற்பட்டு 7பேர் உயிரிழந்துள்ளனர். அந்த  இடத்தில் பல்வேறு வகையான காற்று மாசு உள்ளது. வழக்கமாக காற்றில் நுண் துகள்கள் PM 2.5 மற்றும் PM 10 ஆகியவை கண்டறியப்படும். அமோனியா கசிவு ஏற்பட்ட இடத்தில் காற்றில் NH3 , NO2 , SO2 ஆகிய வாயுக்கள்” உள்ளது.

காற்றில் அமோனியா அளவு 200 ppm முதல் 300 ppm வரை கண்டறியப்பட்டதாக தகவல் அமோனியா கசிவினால் இருவரும் ஒடிசாவை சேர்ந்த- 19 வயது பெண் ஜுமானி ஜுவாங், 20 வயது பெண் மாலோதி ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளானர்.

பாதிக்கப்பட்ட பலர் செங்குன்றம் தனியார் மருத்துவ கல்லூரியில் 11 பேரும், பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 9 பேரும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும் கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமோனியா (Ammonia) வாயு அல்லது ரசாயனங்களைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்பட்ட இறால் மற்றும் மீன்களைச் சாப்பிடுவதால் மனிதர்களுக்குப் பல்வேறு விதமான உடல்நலப் பாதிப்புகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.என்று மருத்துவ ஆய்வில் கண்டரியப்பட்டுள்ளது. பொதுவாக, மீன்கள் அழுகாமல் இருப்பதற்காகவும், ஃப்ரெஷ்ஷாகக் காட்டுவதற்காகவும் மீன் மற்றும் இறால்களில் ஃபார்மலின், அமோனியா போன்ற நச்சு ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

இவற்றைத் தொடர்ந்து உண்பதால் ஏற்படும் முக்கிய பக்க விளைவுகள்:

1. செரிமான மண்டலப் பாதிப்புகள் (Gastrointestinal Issues)
வயிற்று வலி மற்றும் எரிச்சல்: அமோனியா கலந்த உணவை உட்கொள்ளும்போது வாய், தொண்டை, வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கடுமையான எரிச்சல் மற்றும் புண்கள் (Ulcers) ஏற்படலாம்.

வாந்தி மற்றும் குமட்டல்: நச்சுத்தன்மை காரணமாகத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படும்.விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.

2. சிறுநீரகப் பாதிப்பு (Kidney Damage)

உடலில் சேரும் தேவையற்ற நச்சுகளை வடிகட்டும் வேலையைச் சிறுநீரகம் செய்கிறது. அமோனியா மற்றும் ஃபார்மலின் கலந்த மீன்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, சிறுநீரகங்களின் செயல்பாடு குறைந்து, நாளடைவில் சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.3. கல்லீரல் கோளாறுகள் (Liver Problems)

உடலுக்குள் செல்லும் நச்சுக்களைக் கல்லீரல் சுத்திகரிக்க முயலும்போது, அதன் திசுக்கள் பாதிக்கப்படலாம். நீண்ட நாட்களாக இத்தகைய கெமிக்கல் கலந்த உணவுகளை உட்கொள்வது கல்லீரல் வீக்கம் அல்லது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

4. சுவாசப் பாதிப்புகள் (Respiratory Issues)

அமோனியா கலந்த மீன்களைச் சமைக்கும்போதோ அல்லது சாப்பிடும்போதோ அதிலிருந்து வெளிப்படும் காரத்தன்மை கொண்ட வாயு, மூச்சுக்குழாயில் எரிச்சலை உண்டாக்கும். இது ஆஸ்துமா, தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சுவாசப் பிரச்சினைகளைத் தூண்டலாம்.5. நரம்பு மண்டலப் பாதிப்பு (Neurological Issues)

உடலில் அமோனியாவின் அளவு மிக அதிகமாக அதிகரிக்கும்போது (Hyperammonemia), அது ரத்தத்தின் வழியாக மூளையைத் தாக்கி தலைச்சுற்றல், நடுக்கம், குழப்பமான மனநிலை மற்றும் தீவிரமான சூழ்நிலைகளில் கோமா (Coma) போன்ற நிலையை ஏற்படுத்தலாம்.

6. புற்றுநோய் அபாயம் (Cancer Risk)
மீன்களை நீண்ட நாள் கெடாமல் வைக்க அமோனியாவுடன் சேர்த்து ஃபார்மலின் (Formalin) மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஃபார்மலின் என்பது மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஒரு அபாயகரமான காரணியாகும் (Carcinogen).தவிர்க்கும் முறைகள்:

 

மீன் அல்லது இறால் வாங்கும் போது வழக்கத்திற்கு மாறான நெடிய காரத்தன்மை கொண்ட மணம் (Ammonia smell) வீசினால் அதை வாங்கக் கூடாது.Why is fish marinated in salt and turmeric?வாங்கிய மீன்/இறால்களைச் சமைப்பதற்கு முன், உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த நீரில் நன்றாகப் பலமுறை கழுவ வேண்டும்.நம்பகமான மற்றும் சுத்தமான இடங்களிலிருந்து கடல் உணவுகளை வாங்குவது சிறந்தது.

 

மன்னார் வளைகுடா கடலில் அரிய பறக்கும் கோலா மீன்Cuddalore & Pondicherry only 🐠 Free Home Delivery 🐠 Serious buyer only 🐠🐡🐟 Pls Call to Confirmed the Order Thank U Friends 🐠 🐠 🐠 Fresh Sea Fish 🐠 அனைத்து வகை கடல்

பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குக …

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உயர் சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும். என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Share:

இரா. தேவேந்திரன்.

June 26, 2026

Leave a Comment