chennireporters.com

நிலம் அளக்க லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் கைது.

கைது செய்யப்பட்ட சர்வேயர் ஸ்ரீதேவி.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதேவி.ஆர்கே பேட்டை அருகே உள்ள பாலாபுரத்தை சேர்ந்த திருவேங்கடத்தின் மனைவி புவனேஸ்வரி.

தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து தருமாறு ஸ்ரீதேவியிடம் சில தினங்களுக்கு முன்பு முறைப்படி மனு அளித்துள்ளார்.

ஆனால் ஸ்ரீதேவி புவனேஸ்வரியை அலை கழித்து ள்ளார்.ஏன் வர மறுக்கிறீர்கள் என்ன காரணம் என்று ஸ்ரீதேவியிடம் புவனேஸ்வரி கேட்டதற்கு பணம் (லஞ்சம்) கொடுத்தால் வந்து உடனடியாக அளந்து தருவேன் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் தர விருப்பமில்லாத புவனேஸ்வரி காஞ்சிபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்படி லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்து அனுப்பிய பணத்தை பாலாபுரத்தில் உள்ள சர்வேயர் வீட்டிற்கு சென்று ஸ்ரீதேவியிடம் பணத்தை வழங்கினார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சர்வேயர் ஸ்ரீதேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

நிலம் அளக்க பணம் வாங்கி கைது செய்யப்பட்ட ஸ்ரீதேவி மீது ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அது தவிர துணை இயக்குனர் சர்வேயர் துறை (AD Survey) ராமச்சந்திரனுக்கும் பலபுகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இவரைப்போல பல சர்வேயர்கள் மீது மாவட்டம் முழுவதும் பல புகார்கள் எழுந்துள்ளது.

ராமச்சந்திரன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சர்வேயர்கள் பயமில்லாமல் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.இந்த செய்தி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரி லஞ்சம் வாங்கிய வழக்கில் திருவள்ளூரை சேர்ந்த வி.ஏ.ஓ. சங்கத் தலைவர் திருமால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள சர்வேயர்கள் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் அவர்களுக்கு அறப்போர் இயக்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க.!