chennireporters.com

dmK # minister anbarasan; நில மோசடி வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர் அன்பரசன்.

திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தன்னுடைய சொத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சென்னையைச் சேர்ந்த பி சி எம் சன்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் முதலமைச்சர் இன் தனி பிரிவில் புகார் அளித்துள்ளார்.Tha Mo Anbarasanதிமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன்.

அதனை அடுத்து சென்னை பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் தனிப்பிரிவில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது;

சென்னை பரங்கி மலையில் 2024 ஆம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது தேர்தல் பணிமனைக்காக கொடுத்த இடத்தை 5500 சதுர அடி நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் அன்பரசன் திருப்பித் தர மறுக்கிறார். அன்பரசனின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் வந்து கேட்டதின் பேரில் அந்த இடம் தரப்பட்டது.  இதற்கென கட்டாயப்படுத்தி ஆறு மாத குத்தகை ஒப்பந்தமும் செய்தார்கள்.Udhayanidhi Stalin (DMK) - CHEPAUK-THIRUVALLIKENI 2026: Age, Assets,  Affidavit | TN Electionsஉதயநிதி ஸ்டாலின்.

ஆனால் குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்து தரவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த இடத்திற்கான வாடகையும் தரவில்லை. குத்தகை ஒப்பந்தம் சிலர் அது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்கள் போலியாக முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.  தற்போது சட்டவிரோதமாக என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். வாடகை கூட தராமல் என்னை இழுத்தடிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 19ஆம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் என்னை சந்தித்தார் அப்போது ஒரு வாரத்தில் அந்த நிலத்தை தன்னிடம்  அதாவது அன்பரசனிடம் ஒப்படைக்குமாறு பணம் கொடுத்து விடுவதாகும் கூறினார்.மு. க. ஸ்டாலின் - தமிழ் விக்கிப்பீடியாதிமுக தலைவர் ஸ்டாலின்.

ஆனால் நான் நிலத்தை விற்க எனக்கு விருப்பமில்லை எனக்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்று உறுதியாக அவரிடம் தெரிவித்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து பேசுவதாக கூறிச் சென்றவர் பிறகு எந்த பதிலும் எனக்குத் தெரிவிக்கவில்லை பலமுறை நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள  முடியவில்லை எனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார்.வே. செந்தில்பாலாஜி - தமிழ் விக்கிப்பீடியாதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

எனவே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏ.வா. வேலு  முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மோசடி ஊழல் வழக்குகளில் விசாரணை வளையத்தில் உள்ள நிலையில் தற்போது  அன்பரசன் மீதும் நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.  திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இந்த புகார் ஏற்படுத்தி உள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பரங்கிமலை போலீசார் புகாரின் பேரில் விசாரணை நடத்தினர். திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ.வேலு - நமது நேதாஏ.வா. வேலு.

இந்த நிலையில் குற்றச்சாட்டில் முகாந்தாரும் இருப்பது தெரியவந்த நிலையில் பரங்கிமலை போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே செந்தில் பாலாஜி, ஏ வா வேலு, கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் என அடுத்தடுத்த முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது புகார்களும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அன்பரசன் மீதும் நில அபகரிப்பின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம்.. அன்பழகன்  அதிகாரப்பூவ அறிவிப்பு | ex-minister KN Nehru appointed as the chief  secretary of the DMK - Tamil ...

கே என் நேரு.

அன்பரசனுக்கு காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அதாவது ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் இரும்பு ஸ்கிராப் வியாபாரம் செய்து வருவதாகவும் அனைத்து கம்பெனிகளில் தனக்குத் தான் பழைய இரும்புகளை வழங்க வேண்டும் என்றும் பல ரவுடிகளை வைத்து மிரட்டுவதாகவும் முதலமைச்சரின் ஈமெயில் ஐடிக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது என்கின்றனர் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள். Anitha R Radhakrishnan MLA... - Anitha R Radhakrishnan MLAஅனிதா ராதாகிருஷ்ணன்.

ராஜேஷ் சோமசுந்தரம் அவர்களின் இடம் அதாவது இரண்டரை கிரௌண்ட் காலி நிலம் தற்போதைய மார்க்கெட் மதிப்பு சுமார் 40 கோடி வரை இருக்கும் என்கின்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். திமுகவினரிடத்தில் ஆட்சியும் அதிகாரமும் இருக்கும்பொழுது பகுதி செயலாளர் மற்றும் கட்சியின் பெரிய பதவியான மாவட்ட செயலாளர் பதவி வரை உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கட்டப்பஞ்சாயத்து செய்தும் பல தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களை போலி பத்திரம் செய்து மிரட்டி சம்பாதித்த சம்பவங்கள் ஏராளம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது அவரது ஆட்சி காலத்தில் பொது மக்களின் சொத்தை பறிமுதல் செய்த திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து அந்த சொத்துக்களை திரும்பப்பெறும் அதிரடியான ஒரு திட்டத்தை தொடங்கி வைத்தார்.ச. ஜோசப் விஜய் - தமிழ் விக்கிப்பீடியா

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்.

அந்தத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்கின்றனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள். இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான புகார்கள் திமுகவினர் மீது பாயும் என்கின்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். இது போன்ற திமுகவினர் செய்த ஊழல்கள் பித்தலாட்டங்கள் அதிகார வரம்பு மீறிய செயல்கள் குறித்து காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் தொடர்புடைய கூட்டணி கட்சிகள் திமுகவை கண்டித்து பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதையும் படிங்க.!