#fraud involving promises of jobs ; போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்பாக?

June 30, 2026

By இரா. தேவேந்திரன்.

தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 23 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள்  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னாள் திமுக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜியிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகார் அரியலூரை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தனக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் எனக்கு நெருங்கிய நண்பர் அவருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் உனது மகனுக்கு போக்குவரத்து துறையில் உதவி பொறியாளர் பணி வாங்கி தருவதாக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் மொத்தம் ரூபாய் 23 லட்சம் பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் உடன் சிவசங்கர்.

சில சமயங்களில் ரொக்கமாகவும் சில சமயங்கள் ஜிபே மற்றும் சொக்காகவும் கொடுத்திருப்பதாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.  ஆனால் சொன்னபடி இளஞ்செழியன் சீனிவாசன் மகனுக்கு வேலை வாங்கித் தரவில்லை.  இந்த நிலையில் இளஞ்செழியன் சீனிவாசனை ஒரு நாள் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கரனை நேரில் சென்று நமக்கு நெருக்கமானவர். இவரது மகனுக்கு வேலை வேண்டும் என்று சொல்லி அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கரனும் சரி கவலைப்பட வேண்டாம் வேலை நிச்சயம். உறுதி, நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று உறுதி அளித்து உள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக உதவி மைய எண்ஆனால் இதுவரை எனது மகனுக்கு வேலை கிடைக்கவில்லை என்னிடம் இளம்செழியன் வாங்கிய பணத்தையும்  திருப்பியும் தரவில்லை. எனவே இளம்செழியன் மற்றும் சிவசங்கரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனிவாசன் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி போலீசார் இளம்செழியனை கைது செய்தனர்.  முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அளித்துள்ளார். இந்த நிலையில் தவெக அரசு திமுகவுக்கு எதிராக செயல்பட தொடங்கி விட்டது.  என்றும் ஒவ்வொரு ஊழல் வழக்குகளை முன்னாள் அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்படும் என்றும் உளவுத்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். சில திமுகவின் சீனியர் அரசியல் தலைவர்கள் விரைவில் புழலுக்கு போகும் நிலை ஏற்படலாம்  என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

Share:

இரா. தேவேந்திரன்.

June 30, 2026

Leave a Comment