chennireporters.com

#fraud RTI man arrested; பெண்ணிடம் 11.50 லட்சம் மோசடி செய்த ஃபிராடு ஆர்டிஐ நபர் கைது.

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் வீட்டை விற்பதாக கூறி ரூ.11.50 லட்சம் பண மோசடி செய்த காளிமுத்து மகன் தேவேந்திரன் என்பவன்  தன்னை RTI சமூக ஆர்வலர் என்றும் அதன்  பெயரில் சங்கம் வைத்து கொண்டு  சட்டத்திற்கு புறம்பான வேலைகள் செய்து வந்த ஃபிராடு நாயை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர். 

அம்பத்தூர் அருகே  அத்திப்பட்டு, கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் மேகநாதன். இவரது மனைவி வசந்தி (வயது 50). இவருக்கு அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த  RTI சமூக ஆர்வலர் தேவேந்திரன் என்பவரது அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தேவேந்திரன் தனது பெயரில் எவ்வித வில்லங்கமும் இல்லாத பட்டா உள்ள வீடு அயப்பாக்கத்தில் உள்ளது. அந்த வீட்டை நான் விற்க போகிறேன்.வேண்டும் என்றால் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என வசந்தியிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய வசந்தி  கடந்த 2023- ஆம் ஆண்டு மே மாதம் அயப்பாக்கம், பவானி நகரில் உள்ள 875 சதுரடி அடி பரப்பளவு கொண்ட தேவேந்திரன் வீட்டை ரூ.14.50 லட்சத்திற்கு கிரையம் பேசி, முன்பணமாக ரூ.11.50 லட்சத்தை தேவேந்திரனிடம் கொடுத்து உள்ளார்

ஆர்.டி‌.ஐ ஃபிராடு தேவேந்திரன்.

அதன்பிறகு தேவேந்திரன் வீட்டை வசந்தியிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றியுள்ளார். இதனால் வசந்தி வீட்டை ஒப்படைக்கும்படி தேவேந்திரனை சந்தித்து  பல முறை கேட்டுள்ளார்.  அதற்கு ஃ பிராடு தேவேந்திரன் வசந்தியை வீட்டையும் தரமுடியாது பணத்தையும் தரமுடியாது என்று ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். கடைசியாக இரண்டு தினங்களுக்கு முன்பு ஃபிராடு தேவேந்திரனை வீடு தரவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய பணத்தையாவது திருப்பி கொடுத்து விடுங்கள் என கேட்ட போது, வசந்தியை அவதூறாக பேசி ஃபிராடு தேவேந்திரன் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .

இதில் காயம் அடைந்த வசந்தி இது குறித்து வசந்தி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் பொன்ராஜ் மற்றும் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தேவேந்திரனை  கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேற்படி இந்த ஆர்.டி‌.ஐ ஃபிராடு தேவேந்திரன் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதாவது கள்ளத்தனமாக மது விற்றதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கள்ளத்தனமாக மது விற்றதாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்ற எண் 318 குற்ற எண் 319, அதேபோல திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அந்த வழக்குகளின் குற்ற எண் 818, 654 ஆகும். தற்போது பண மோசடி மற்றும் பெண்ணை கொடூரமாக தாக்கியதாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் நிலுவையில் உள்ளன குறிப்பாக சைபர் கிரைம் குற்ற பிரிவு பிரிவில் பல புகார்கள் நிலுவையில் உள்ளன.

பூந்தமல்லி நகராட்சி திமுக சேர்மன் காயத்ரியின் கணவர் சுதாகர் என்பவரை மிரட்டி பணம் கேட்டுள்ளார்.  அது தொடர்பாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு அந்தப் புகார் விசாரணையில் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

மேலும் இவர் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் என்கிற இணையதளத்தின் பெயரை பல இடங்களில் தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் தான் ஆர்.டி.ஐ சமூக ஆர்வலர் கள் தொடர்பாக கூட்டங்கள் நடத்தி பல இடங்களில் பண வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

இவர் மீது உள்ள மொத்த வழக்குகள் எத்தனை இவர் யார் யார் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டியுள்ளார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்கின்றனர் இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

இவர் ஏற்கனவே போலீஸ் அதிகாரிகளையும், போலீசாரையும் தரை குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.  அந்த வழக்கில் இவருக்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் வலது கையில் காயமும் உடம்பில் சில இடங்களிலும் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் திருவள்ளூர், பூந்தமல்லி, செங்குன்றம், ஆவடி ஆகிய பகுதிகளில் சில டுபாக்கூர் ரிப்போர்டர்கள் இவரிடம் கைகோர்த்துக்கொண்டு பல்வேறு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.

ராஜன்.

இதில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் மாற்றுத்திறனாளி இவர் இவருடன் கைகோர்த்துக்கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அவர்கள் டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்கின்றனர் சில நேர்மையான மூத்த பத்திரிகையாளர்கள்.

இதையும் படிங்க.!