chennireporters.com

பிரெஞ்ச் ஓபன் தகுதிசுற்று: இந்திய வீரர்கள் தோல்வி முகம்!

பிரெஞ்ச் ஓபன் தகுதிசுற்று: இந்திய வீரர்கள் தோல்வி முகம்!

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேறினர்.

இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 30ம் தேதி நடக்கிறது.

சுமித், பிரஜ்னேஷ், ராம்குமார், அங்கிதா ரெய்னா என 4 இந்திய வீரர்கள் பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்றனர்.

இந்திய வீரர் பிரஜ்னேஷ் 2க்கு6, 2க்கு6 என்ற செட்கணக்கில்முதல் ஆட்டத்திலேயே ஜெர்மனி வீரர் ஆஸ்கரிடம் தோல்வி அடைந்தார்.

அடுத்த வீராங்கனை அங்கீதா, ஜெர்மனியின் கிரீட் மின்னனுவை சந்தித்தபோது 2க்கு6, 0க்கு6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸிடம் 1க்கு6, 2க்கு6 என்ற நேர்செட் கணக்கில் ராம்குமார் தோல்வி அடைந்தார்.

இந்தியாவின் நம்பர் 1 வீரரான சுமித் நாகல், சிலியின் டபிலோவை எதிர்கொண்டபோது 3க்கு6, 3க்கு6 என்ற நேர்செட் கணக்கில் தோல்வி
அடைந்தார்.

இதனால் இவர்கள் 4 பேரும் வெளியேறினர்.

இதையும் படிங்க.!