தமிழக துணை முதல்வர் உதயநிதியின் இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டது. அந்தப் பக்கத்தை மீட்பதற்கு முயற்சி நடந்து கொண்டிருந்த இடைவெளியில், சில புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருக்கிறது.
ஹேக் செய்யபட்ட துணை முதல்வரின் பக்கம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு, அந்த புகைப்படம் டெலிட் செய்யப்பட்டுவிட்டது.

இதே போல தமிழகத்தில் உள்ள விஐபிகள் போலீஸ் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் தொழிலதிபர்கள் என பலரின் பேஸ்புக் பக்கங்களும் இன்ஸ்டால் பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அதில் தங்களது நண்பர்களுக்கு நான் தற்போது வெளியில் இருக்கிறேன். அவசரமாக பணம் தேவைப்படுகிறது . பணம் அனுப்புங்கள் என்ற கோரிக்கையும் அதில் வைக்கப்படும். சிலர் சம்பந்தப்பட்ட நபர்களை கேட்காமலேயே அந்த குறிப்பிட்ட எண்ணுக்கு பணம் அனுப்பி ஏமாந்தவர்களும் உண்டு இது குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் பல வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

குறிப்பாக சின்னத்திரை நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்களின் ஐடியில் போலியான வட மாநிலத்தை சேர்ந்த சீட்டிங் நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு நான்கு மணி நேரத்தில் தனிநபர் கடன் வழங்குவதாகவும் அவர்கள் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து உடனடியாக ஆயிரம் ரூபாய் அனுப்பினால் 3 மணி நேரத்தில் 25 ஆயிரம் லோன் வழங்குவதாகவும் சொல்லி பல சீட்டிங்குகள் நடைபெற்றுள்ளன.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு தொடர்பில்லாத அறிமுகம் இல்லாத நபர்களின் பெயர்களில் எந்த அறிவிப்புகளும் அல்லது விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டால் அதை நிராகரிக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களை செல்போனில் அடைத்து உங்கள் பெயரில் இதுபோன்று ஒரு செய்திகள் வெளி வருகிறது என்பதை கேட்டு தெரிந்து கொண்டு தகவல் சொல்ல வேண்டும் என்கின்றனர். சைபர் கிரைம் போலீசார் பொதுமக்கள் உஷாராக இருப்பது அவர்களின் தனிப்பட்ட கடமையாகும்.
