chennireporters.com

#A fighter’s tears are love; ஈழத்தை விட நான் அழகல்ல.. ஒரு போராளியின் கண்ணீர் காதல்.

கடந்த நான்கு நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு ஈழத்து கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. கண்ணீரோடு கடக்கும் காதலர் தினம் :
ஒரு #போராளியின் #காதல்  என்ற தலைப்பில் வெளியான அந்த காதல் கவிதையை நெடுந்தீவு முகிலன் என்பவர் எழுதியுள்ளார். தன் வலிகளையும் தன் உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. வாசகர்களையும், உணர்வாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

இந்த உலகத்தில் நீதான் அழகி என்று நான் சொன்ன போது எல்லாம் ஈழத்தை விடவா நான் அழகு என்று அவள் என்னிடம் கேட்ப்பாள்.

அவளை சந்திக்க வேண்டும் நிறைய பேச வேண்டும் என எதிர்பார்த்து காத்திருப்பேன் – அவளோ
ஊரின் எல்லையில் துப்பாக்கியோடு கண்விழித்து காவல் இருப்பாள்.நல்ல நாள் திருநாளில் அவளுக்கு ஒரு புது புடவை வாங்கி பரிசளிக்க முயற்சித்தால் – அம்மா அப்பாவை இழந்து பசியோடு வாடும் குழந்தைகளை பற்றியே அவள் என்னோடு பேசிக் கொண்டிருப்பாள்.

சிறு மஞ்சல் கயிற்றையாவது கட்டி அவளை
மனைவியாக்கி விட வேண்டும் என்ற கற்ப்பனையில் நான் இருந்தேன் – அவளோ கழுத்தில் நஞ்சை கட்டிக் கொண்டு நமக்கு ஒரு தேசம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.அவளும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் எப்படியிருக்குமென மனக்கோட்டை கட்டி வாழ்தேன். மண் மூட்டைகளை அடுக்கி மக்களுக்காக – அவள் பதுங்கு குழி தோண்டிக் கொண்டிருந்தாள்.பூக்களில் இருந்து அவளது முகத்தையும் காற்றின் ஒலிகளில் இருந்து அவளது குரலையும் பிரித்து எடுத்து கொண்டிருந்தேன் – குண்டு மழையிலும் இரத்த வெள்ளத்திலும் அவள் நெஞ்சை நிமிர்தி
போராடிக் கொண்டிருந்தாள்.

#என்னுடைய #காதல் #அவள் #மீது #இருந்தது. #அவளுடைய #காதல் #மண் #மேலே #இருந்தது…

எப்படியாவது அவள் என் வீட்டிற்கு விளக்கேற்ற
வருவாள் என்றே நம்பியிருந்தேன் – ஆனால்
அவள் வித்துடலை புதைத்த மண் மேலே
நான் நினைவு தீபம் ஏற்றுவதற்கு
அவள் கல்லறையை கூட விட்டு வைக்கவில்லை…நெடுந்தீவு முகிலன் – neduntheevu mukilan
மீள் பதிவு

இப்படி முடிகிறது இந்த கவிதை. மனித காதலின் வலிகளையும் உணர்வுகளையும் அழகாக உருவகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!