chennireporters.com

இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி.

கல்லூரியில் படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் ,ஐ.ஏ.எஸ் அவர்களின் முயற்சியில் நகர் புற வாரிய குடியிருப்புகளில் உள்ள 140ற்பது.

மாணவ மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்ந்து பணம் கட்டி செலுத்த முடியாத சூழலில் உள்ள மாணவர்களுக்கு HDFC வங்கியின் மூலம் நிதி உதவிக்கு ஏற்பாடு செய்துள்ளார். கண்ணகி நகரில் மட்டும் 57 மாணவர்கள் நிதி உதவி பெற உள்ளார்கள்.

அவர்களில் 45 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.(15.3.22) மாலை மேலாண்மை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி நிதி உதவி பெற உள்ள மாணவர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சிவசங்கரன்( E.E) நிர்வாக பொறியாளர் அவர்கள்,சம்பத் (Chief CCDO )அவர்கள், திருமதி.லெகீஸ் (SDS) அவர்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்க்கையில் படிப்பைத் தொடர்வதில் ஏற்பட்ட பல கடினமான சூழ்நிலைகளை குறிப்பிட்டு மாணவர்கள் அனைவருக்கும் அவ்வாறான சூழல் ஏற்படாதவாறு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்கள் கல்லூரிப் படிப்பை தொடர மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும்,

கல்வியின் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு தங்களுடைய பங்களிப்பை எவ்வாறெல்லாம் வழங்க முடியும் என்பதை பல சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்கள்.

வாரியத்தின் குடியிருப்பு பகுதிகளில் தற்போது நடை பெற்று வரும் மக்கள் மேம்பாட்டு பணிகளையும், நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தை பற்றியும், பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பற்றியும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.

இச்சந்திப்பு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவர்கள் தெரியப்படுத்தியது மகிழ்ச்சி அளித்தது.இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்து கொடுத்த வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் திரு. கோவிந்த ராவ் இ.ஆ.ப அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய அதிகாரிகளுக்கு மாணவர்கள் தரப்பில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை டாக்டர்.ஆ ப ஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் நிர்வாகி அ.மாரிச்சாமி ஏற்பாடு செய்திருந்தார்.

இதையும் படிங்க.!