chennireporters.com

IAS vs IPS. ஐகியூ உள்ள அறிவாளிகள் யார்? சசிகாந்த் செந்திலா? அண்ணாமலையா? இணையத்தில் வைரலாகும் பதிவு.

கர்நாடக மாநில தேர்தலின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மின்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச்சிகாந்த் செந்தில் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வரைலாகி வருகிறது.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஒப்பிடப்பட்டுள்ள பதிவு பற்றி காங்கிரஸ் காங்கிரஸ் பாராளுமன்ற பொறுப்பாளர் முகம்மது என்கிற வாசித்கிர்மானி என்பவர் பெயரில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

இருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். இடஒதுக்கீட்டால் ஐஏஎஸ், ஐபிஎஸ் பொறுப்புக்கு தேர்ந்துதெடுக்கப்பட்டு கர்நாடக மாநிலம் போனவர்கள். சசிகாந்த் அகில இந்திய ரேங்க் – 9 (IAS) அண்ணாமலை அகில இந்திய ரேங்க் – 244 (IPS)

தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமனம் | sasikanth senthil - hindutamil.in

தனக்கு கிடைத்த வாய்ப்பு மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் சசிகாந்த்.
தனக்கு கிடைத்த வாய்ப்பு மற்ற பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அதுவும் தனது சமூக மக்களுக்கு கூட கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர் அண்ணாமலை.

ஆண்டு ஒன்றுக்கு ஆயிரம் பேர் பாசாகும் சிவில் சர்வீசஸ் தேர்வில் நானும் பாஸாகி சர்வீஸ்க்கு வந்தேன் என்று நினைப்பவர் சசிகாந்த்.
ஆனால் இந்தியாவிலே ஐபிஎஸ் படித்தவன் தான் மட்டுமே என்ற அறியாத்திமிர் கொண்டவர் அண்ணாமலை.

அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வர ஐடியா கொடுத்தவருக்கு நன்றி.. சசிகாந்த் செந்தில் சொல்றத பாருங்க! | Thanks to the person who gave the idea of bringing Annamalai ...

சசிகாந்த் இந்த நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக பணயாற்றுபவர்.
அண்ணாமலை அடியாள் வேலை செய்யும் நாக்பூர் கைக்கூலி.

பத்திரிக்கையாளர்களை ஜனநாயகத்தின் அங்கமாக பார்ப்பவர் சசிகாந்த். பத்தரிக்கையாளர்களை தனக்கு கீழ் பணியாற்றும் காண்ஸ்டபிள் போல நடத்துபவர் அண்ணாமலை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகிறாரா முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்? | Will Sasikanth Senthil become next president of TNCC

நேர்மை என்பது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை பண்பு என்று நினைத்து செயல்படுபவர் சசிகாந்த். ஆருத்ரா ஊழல்வாதி முதல் அனைத்து விதமான ஊழல்வாதிகளையும் ஆதரித்து விட்டு வெளியே நேர்மை நாடகம் போடும் வேடதாரி அண்ணாமலை.

திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுபவர் சசிகாந்த்.
சனாதனத்தை வாழ்வியலாக கொண்ட பிற்போக்குவாதி அண்ணாமலை.

Modi has created a new class of voters out of beneficiaries of govt. schemes that is immune to political narratives, says Annamalai - The Hindu

பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கர்நாடகாவில் தனது கட்சிக்கு வெற்றியை தேடித்தந்தவர் சசிகாந்த்.
தேர்தல் களம் பற்றி எதுவும் தெரியாமல் வெத்து உருட்டு உருட்டி கட்சியை மண்ணக்கவ்வ வைத்தவர் அண்ணாமலை.

தனது கொள்கைக்கு உகந்த கட்சியை தேர்ந்தெடுத்தவர் சசிகாந்த்.
ரஜினி கட்சி ஆரம்பித்தால் சேரலாமா!? மாஃபா பாண்டியராஜன் மூலம் விஜயகாந்த் கட்சியில் சேரலாமா!? அரசியல் நோக்கம் அல்ல தற்சாற்பு பொருளாதாரம், ஆடு மேய்ப்பது என்று எல்லா ரூட்டையும் போட்டு பாஜகவில் ஐக்கியமானவர் அண்ணாமலை.

தான் வாசித்த புத்தகங்கள் தனது அனுபவங்களை தனது பேச்சின், செயலின் மூலம் காட்டுபவர் சசிகாந்த்.20ஆயிரம் புத்தகங்கள் படித்தேன் என்று கதை சொல்லிவிட்டு ஒரு திருக்குறள் சொல்ல முடியாமல் போன் போட்டு திருக்குறளை கடன் வாங்குபவர் அண்ணாமலை.

Sasikanth Senthil News in Tamil | Latest Sasikanth Senthil Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil

படித்த இளைஞர்களுடன் பணியாற்றுபவர் சசிகாந்த்.
கல்வெட்டு ரவி, அபின் அடைக்கலம், ஆருத்ரா ஹரீஷ் என்று சமூகவிரோதிகளை வைத்துக் கொண்டு வேலை செய்பவர் அண்ணாமலை. ஆக மொத்தத்தில் சசிகாந்த் நிறைகுடம் அண்ணாமலை குறை குடம். 

இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது இந்த பதிவு குறித்து அண்ணாமலை தரப்பினர் அனல் கக்கும் டென்ஷனில் இருப்பதாக சொல்கிறார்கள் பாஜக அலுவலக தாமரை சொந்தங்கள்.

அண்ணாமலை கர்நாடகத்தில் எப்படி தனது ஐபிஎஸ் பணியை செய்தார் என்பதை சசிகாந்த் அறிவார் என்றும் அண்ணாமலை பற்றி பல ரகசிய தகவல்கள் சசிகாந்த் தரப்படும் இருப்பதாகவும் சொல்கிறார்கள் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

இதையும் படிங்க.!