chennireporters.com

அண்ணாமலைக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறதா?

பத்திரிகையாளர் ஒருவரை நல்ல மனநல மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற வேண்டும் என்று அண்மையில் சீமான் கூறியிருந்தார்.

 

ஆனால் இன்று தலைகீழாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது எப்போதுமே நிதானம் இல்லாமல் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் ஒரு சம்பவத்திற்கும் இன்னொரு சம்பவத்திற்கும் தொடர்பு இல்லாமல் பேசும் மனநிலையை கொண்டவராக இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை .

ஒருவேளை இவரை மனதில் வைத்து தான் சீமான் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்கிறார்கள் சென்னை பத்திரிகையாளர்கள் சங்க பொறுப்பாளர்கள்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் என்ற அந்தஸ்துக்கு எவ்வளவு பங்கம் விளைவிக்க முடியுமோ அந்த அளவுக்கு பங்கம் ஏற்படுத்தும் பண்பற்ற பண்பாளராக, அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை இருக்கிறார் என்பதை சென்னையில் புதன்கிழமை (4.1.2023) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

பத்திரிகை நிருபர்களை தரம் தாழ்ந்து கடிந்து கொள்வது, அவர்களை விமர்சிப்பது ஒன்றும் அண்ணாமலைக்கு புதிதல்ல. இதுபோன்று பேசிய பல தலைவர்களின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் பார்த்தவர்கள்தான் முந்தைய தலைமுறை பத்திரிகையாளர்களும், இன்றைய இளம்தலைமுறை பத்திரிகையாளர்களும் என்பதிலும் ஐயமில்லை.

அந்த வகையில் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் நிருபர் உள்பட, இன்னும் பல பிரபல பத்திரிகைகளின் நிருபர்களையும் தன் பேச்சின் மூலம் அவமதித்திருக்கிறார்.

அரசியலில் இன்னமும் பக்குவம் பெறாதவராக இருக்கிறார் என்றுதான் பலரும் ஏற்கெனவே விமர்சித்து வந்தனர். ஆனால் நாளும் நாலாயிரம் வசைச் சொற்களை பத்திரிகையாளர்கள், ஊடகங்கள மீது வீசி வருவதன் உச்சமாக புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாக, எல்லா வசைச்சொற்களையும் தாங்கிக்கொண்டு தங்கள் கடமையை செய்துவரும் நிலையில், அவர்கள் மீது வார்த்தைகளால், வன்முறையால், மிரட்டலால், அதிகார பலத்தால் தாக்குதல் நடத்தப்படுவது இந்த ஜனநாயக நாட்டில் அடிக்கடி நடை பெறும் சம்பவங்கள்.

தமிழக பாஜகவை பொறுத்தவரை, பொதுவாக, இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் முடிந்தவரை நாகரீகமாக பத்திரிகையாளர்களை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு இப்போது விதிவிலக்காக அண்ணாமலை இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவர் பாஜகவை வளர்க்க விரும்புகிறாரோ இல்லையோ, தன்னை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதை ஆளும் மத்திய அரசாக விளங்கும் பாஜகவும் வேடிக்கை பார்ப்பது அதைவிட வேடிக்கையாக உள்ளது. அண்ணாமலை என்றால் பாஜக, பாஜக என்றால் அண்ணாமலை என்ற அகம்பாவ போக்கை கட்சியின் மூத்த தமிழகத் தலைவர்களே ரசிப்பது அதைவிட வேடிக்கை.

பொது இடங்களிலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் எதிர்க்கட்சிகள் மீதும், ஆளும் கட்சியின் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அண்ணாமலை, அதற்கான பதில் கிடைக்கும்போது அமைதியாகி விடுவது வாடிக்கை. திருவிளையாடலில் வரும் நாகேஷ் சொல்வதுபோல், அவருக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்.

பதில் சொல்லத் தெரியாது என்பது ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அடிக்கடி நிரூபணமாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் ஒரு நிருபரின் தூண்டிலில் சிக்கிய அவர் இன்னமும் அதில் இருந்து மீளமுடியவில்லை.

காரணம், வாய் திறந்தாலே, நம்பமுடியாத தகவல்களை, உண்மைக்கு புறம்பான தகவல்களை அள்ளி வீசுவது அவரது பாணியோ என்ற சந்தேகம் ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் உறுதியானது. இன்று வரை ரஃபேல் வாட்சுக்கு அவரால் ரசீது காட்ட முடியாமல் ஏதேதோ சொல்லி மழுப்பி வருவது  வெட்க்கேடு.

அவர் அடிக்கடி எதிர்க்கட்சிகளை நோக்கி புகார்களை அள்ளி வீசும்போது, அதற்கு ஆதாரம் இருப்பதாக கூறுவது வாடிக்கை. அந்த வகையில் அவர் புதன்கிழமையும் ஒரு தனியார் நிறுவனம் தொடர்பான விவகாரத்தை கையெலெடுத்தபோது, புதிய தலைமுறை ஏற்கெனவே அந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டது குறித்தும், தக்க ஆதாரம் இருந்தால் அதை வெளியிடத் தயார் என்றும் தொலைக்காட்சிகளின் நேரலையின்போது சவால் விடுத்தபோது, தனி அறைக்கு அந்த பத்திரிகை நிருபரை அழைத்து மிரட்டியுள்ளது அநாகரீகத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

 

23 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் ஒரு பத்திரிகையாளனாக இருந்த எனக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளே, இன்னமும் உங்கள் தலைவர் வாயில் வந்தபடி உளறுவது, பத்திரிகையாளர்களை குரங்குகள் போல், பிச்சைக்காரர்கள் போல், பேசுவதுதான் ஒரு கட்சியின் தலைவரின் அறுகதையாக நினைக்கிறீர்களா? அத்தகைய தலைமைதான் உங்களுக்கு வேண்டும் என்று கருதுகிறீர்களா? என்று உங்கள் மனசாட்சியிடம் ஒரு முறை கேளுங்கள்.

உங்கள் மனசாட்சி இடம் கொடுத்தால் அமைதியாக இருங்கள். ஒருவேளை, மனசாட்சி உறுத்தினால், இன்னமும் நமக்கென்ன என்று நீங்கள் ஒதுங்கி இருக்காமல், பாஜக என்ற பெயருக்கு தமிழகத்தில் வேறு ஒரு அர்த்தத்தை, மிகப்பெரிய களங்கத்தை உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உணர்த்தி விடுவார் என்பதை இப்போதாவது புரிந்துகொண்டு செயல்படுங்கள் என்பதுதான்.

இனியாவது பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்கள் அண்ணாமலையாக அழைத்தால் அன்றி ஓடோடிச் சென்று பேட்டி எடுக்கும் கலாசாரத்தை கைவிடுங்கள். உங்கள் நிலைமையை நிர்வாகத்திடம் தெரிவித்து சம்மதிக்க வையுங்கள். நீங்கள் ஒருவரை தேடிச் செல்வதால்தான் அவர் உங்களை ஓடஓட விரட்டுகிறார்.

நீ என் செய்தியை போட வேண்டும் என்பது அவசியமில்லை என்று ஒருவர் சவால் விடும்போது, அதை கருத்தில் கொண்டு அந்த சவாலை சந்திப்பதுதான் பத்திரிகை நிர்வாகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கௌரவம்.

இன்னும் தமிழக பத்திரிகை முதலாளிகள் தூக்கத்தில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. நல்ல ரிப்போட்டரிடம் அண்ணாமலை ஒரு நாள் நிச்சயம் சிக்குவார். அப்போது ஆட்டுக்குட்டி கசாப்பு கடைக்கு சென்று விடும். 

 

இதையும் படிங்க.!