chennireporters.com

டி.டி.வியை ஓரம் கட்டுகிறாரா சசிகலா?

ஜெயலலிதா நினைவு நாள் அன்று அவரது சமாதிக்கு சசிகலாவும் ,டிடிவி தினகரனும் தனித்தனியாக அஞ்சலி செலுத்த சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.

ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இருவரும் தனித்தனியாக நேற்று சென்றனர். தினகரன் அஞ்சலி செலுத்த சென்ற செய்தியை  ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பாமல் புறக்கணித்தது.

இந்த நிலையில் திடீரென இன்று சென்னை ராயப்பேட்டை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில சிறுபான்மை பிரிவு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட சிறுபான்மையர் பிரிவு தலைமை கழக நிர்வாகிகள், பொறுப்பில் உள்ள இஸ்லாமிய சமூக, கிறிஸ்தவ சமூக, சிறுபான்மையர் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மாநில உரிமைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மதிக்கும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது

குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் வாக்கு சதவீதம் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளதா? கட்சியில் எதிர்ப்பு நிலை உருவாகுமா ? கிளைக் கழக ஒன்றிய நகர பொறுப்பாளர்களிடம் எதிர்ப்பு உள்ளதா? என்று சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்களிடம் தினகரன் தனித்தனியாக கருத்து கேட்டு ஆலோசனை நடத்தினார்.

கட்சியின் எதிர்கால நலன் கருதியும், மாநில உரிமைகாக்கவும் பிஜேபியுடன் கூட்டணி வைக்கலாம் என்று ஒட்டு மொத்த மாநில நிர்வாகிகளும் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளும் தினகரனுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை முழுவதுமாக ஜெயா பிளஸ் தொலைகாட்சி நிராகரித்துள்ள நிலையில்
ஆலோசனை கூட்டத்தை முழுவதுமாக நியூஸ்7 தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. தினகரனுக்கும், சசிகலாவுக்கும் இடையே நடைபெறும் உச்சகட்ட மோதலை வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க.!