chennireporters.com

எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தர ஒரு கோடி ரூபாய் “கட்டிங்” கேட்ட கே.பி.முனுசாமி.

எம் எல் ஏ சீட்டு வாங்கி தர ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் அவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு கேபி முனுசாமிக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளார்.

ஓபிஎஸ்  வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி என்னிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டதற்கான ஆடியோவை இப்போது வெளியிடுகிறேன் என்று பத்திரிகையாளர்கள்  முன்னிலையில் ஆடியோவை வெளியிட்டார்.

இதற்கு பதில்  அளிக்காவிட்டால் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன் என்று மேலும் ஒரு ஷாக் கொடுத்தார்.  அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு இடமே கிடையாது அதிமுகவில் இருந்து அவர் நீண்ட தூரம் சென்று விட்டார் என கே.பி முனுசாமி கூறியுள்ளார்.

ஆனால் கே.பி முனுசாமிக்கு பதவி கொடுத்ததே பன்னீர்செல்வம் தான் அதிமுகவில் இருந்து கொண்டே அன்புமணிக்கு உழைத்தவர் கே பி முனுசாமி வாங்கும் பணத்திற்காக உழைப்பவர்.  அவர் பசை உள்ள இடத்தில்தான் இருப்பார்.  கே.பி முனுசாமி பற்றி தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் ஆடியோ வெளியிடுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொளத்தூர் தொகுதியில் சீட்டு பெற்றுத் தர கே.பி முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக புகார் தெரிவித்துள்ள கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பணத்தைப் பெற்றுக் கொள்ள தனது மகனை அனுப்புவதாக என்னிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து  பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி புகாருக்கு கே.பி முனுசாமி  இது வரை பதில் தரவில்லை.  ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டும். இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என அதிமுகவின் லட்சக்கணக்கான தொண்டர்கள் உழைக்கிறார்கள்.

அவர்களைப் போல ஓபிஎஸ் உழைக்க முடியுமா எம்ஜிஆர் ஜெயலலிதா புகழ் நிலைக்க வேண்டும் என்று தொண்டர்கள் பாடுபடுகிறார்கள். ஓபிஎஸ்ஐ அதிமுகவும் விட்டு வெகு தூரம் சென்று விட்டார் எனவே அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என்று ஈரோட்டில் கே.பி முனுசாமி நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுபோல எடப்பாடி அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களின் ஆடியோக்கள் இன்னும் எத்தனை இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க.!