chennireporters.com

சென்னை போரூரில் இயற்கை விவசாய பொருட்காட்சி.

போரூர் ராஜா திருமண மண்டபம் நடைபெறும் இந்த கண்காட்சியை மதுரவாயில் தி.மு.க. எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கையர்கள், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் போன்றவர்களின் உற்பத்திப் பொருளுக்கு எங்களின் அரங்கில் முன்னுரை முன்னுரிமை தரப்படும்.

தமிழகத்தில் உள்ள 112 இலங்கை தமிழர்களின் முகாம்களில் உள்ள தொழில் முனைவோர் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள், பலகார வகைகள், பேக்கரி வகைகள், மற்றும் உணவுப் பொருட்கள்.

 

தேயிலை வகைகள், பனையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இங்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பெண் தொழில் முனைவோர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் இங்கு அரங்கு வழங்கப்படும்.

அம்பத்தூர் காமராசர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி,போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி போன்றவற்றில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில் முனைவோர்களுக்கு இலவசமாக அரங்குகள் இலவசமாக அமைக்க இடம் வழங்கப்படும்.

 

இயற்கை விவசாயிகளின் காய்கறி, பழங்கள், தானிய வகைகள், விதைகள் பனைப் பொருட்கள், பதநீர், பனை வெல்லம், இயற்கை தேன், சித்த மருத்துவ பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், நெசவுப் பொருட்கள், கடல் உணவுகள், ஆயத்த ஆடைகள், சுருள்பாசி உற்பத்திப் பொருட்கள், பல்துறை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் .

கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கும் பொருட்கள் என பலதரப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. 40 வகையான அரிசிகள், சீனி உற்பத்தி பொருட்கள், அறிவியல் நூல்கள், கடல்பாசி உற்பத்தி போன்றவை இங்கு கிடைக்கும்.

இங்கே சித்த மருத்துவம் நாடி பிடித்துப் பார்க்கும் வர்மக்கலை நிபுணர் சித்த மருத்துவர் ஸ்ரீதர். இங்கே ஐந்து நாட்கள் இங்கு வரும் பொதுமக்களுக்கு சித்த வைத்தியம் மூலம் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.

கேன்சர், பெண்களுக்கான கருப்பை நீர்க்கட்டிகள், சுகர், கிட்னி ப்ராப்ளம், முதுகு தண்டுவடம் என அனைத்து நோய்களுக்கும் இங்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.

(சனிக்கிழமை ) இன்று  முதல் புதன்கிழமை வரை அதாவது 6,7,8,9,10 ம் தேதி வரை ஐந்து நாட்கள் இந்த இயற்கை விவசாய பொருட்காட்சி போரூரில் உள்ள ராஜ் மகாலில்  நடைபெறும்.


இந்த விழாவில் இந்த இயற்கை பொருட்காட்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான இயற்கை தொடர்பான இயற்கை பொருட்களை வாங்கி பயன் பெறலாம்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை உலகளவில் பண்டைத் தமிழர்களின் பாரம்பரியங்களை மேம்படுத்தும் நிறுவனமான உட்லா டிரஸ்ட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புக்கு
9150355678, 8754219331 9962958434,

இதையும் படிங்க.!