chennireporters.com

350 மோட்டார் பைக்குகளை திருடி விற்ற போலீசார். பாதுகாக்கும் திராவிட மாடல் அரசு.

தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2020 21 ஆம் ஆண்டு காலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் மோட்டார் பைக்குகள் கொரோனா காலத்தில் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.  கொரோனாவில் பாதிக்கப்பட்ட பலர் இறந்துவிட்ட நிலையில் நேரடியாக காவல் நிலையம் வந்து வண்டிகளை  உரிமைக்கோர வரவில்லை.  அது தவிர மேலும் பல ர் ஆர்.சிபுக்,  இன்சூரன்ஸ் இல்லாததால் பலர் வண்டிகளை கேட்டு தேனாம்பேட்டை  காவல் நிலையத்திற்கு வரவில்லை.

 

இந்த நிலையில் தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முரளி அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய விஜய கார்த்திகேயன், முருகன்,  ஜே.சி. சிறப்பு படை செகண்ட் லெவல் உளவுத்துறை காவலர் கண்ணன் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவோடு இரவாக காங்கிரஸ் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ராஜரத்தினம் மைதானத்தில் மாற்றப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு இரண்டு ஆட்டோ 36 பைக்குகளை மட்டும் ராஜரத்தினம் போலீஸ் மைதானத்தில் வைத்துவிட்டு அதாவது (M.T. JC) மீதமுள்ள பைக்குகளை புதுப்பேட்டையில் உள்ள ஒரு முக்கிய பிரமுகரிடம் மொத்த விலைக்கு விற்று விட்டனர்.

 

மொத்தம் சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மோட்டார் பைக்குகளை விற்பனை செய்துள்தாக கூறுகின்றனர். இதில் பெரும் பங்கு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முரளிக்கும் மீதமுள்ள தொகை மேற்படி போலீஸ்காரர்கள் பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது. 

மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட  இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளாக இருந்த சில சப் இன்ஸ்பெக்டர்களுக்கு  இந்த விபரம் சொல்லப்படவில்லையாம் . அது தவிற தங்களுக்கான பங்கை சரியான முறையில்  பிரித்து தராத காரணத்தினால் இந்த செய்தியை மெல்ல மெல்ல கசியவிட்டுள்ளனர் பங்கு கிடைக்காத சில போலீசார்.

இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான இந்த போலீசார் பைக்குகளை திருடிவிற்ற சம்பவத்தில் இதுவரை உயர் அதிகாரிகள் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகளுக்கு இந்த பைக் விற்றதில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தனி அறிக்கை ஒன்ரை கமிஷனருக்கு அனுப்பி உள்ளதாக சொல்லுகிறார்கள் சில உளவுத்துறை அதிகாரிகள்.  இந்த சம்பவம் தொடர்பாக தி.நகர் துனை ஆணையர் அருண் கபிலன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.  அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவரது வாட்ஸ் அப்பிற்கு செய்தி அனுப்பியுள்ளோம்.

தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் மோட்டார் பைக் திருடிவிற்ற சம்பவம் சென்னை மாநகர காவல் துறையை தலைகுனிய வைத்துள்ளது.  இந்த நிலையில் பைக் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உளவுப்பிரிவு காவலர் கண்ணன் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள எல்லா காவல் நிலையங்களிலும் இது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி தான், எங்களை மட்டும் திட்டமிட்டு ஒரு சில அதிகாரிகள் பழி வாங்குகிறார்கள் என்று சக போலீசாரிடம் புலம்பி வருகிறாராம்.

 

சென்னை மாநகர் முழுவதும் உள்ள எல்லா காவல் நிலையங்களிலும் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கார் ஆட்டோ மோட்டார் பைக் என அனைத்து வாகனங்களையும் ஒவ்வொரு ஆண்டும் அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஏலம் விட வேண்டும் இல்லை என்றால் எத்தனை வண்டிகள் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்கிற கணக்கு விபரத்தை அதிகாரிகள் கணக்கு வைத்திருக்கவேண்டும். இதை தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கவேண்டும் அது தவிற சி.சி.டிவி வைக்கப்பட்டால் இது போன்ற திருட்டை தடுக்கலாம் என்கின்றனர் பொது மக்கள்.  தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள வாகனங்களின் நிலை கேள்விக்குறியதாகி விடும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!