chennireporters.com

#Ramdas; தரம் தாழ்ந்து பேசும் ராமதாஸ் இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு.

மன்னிப்பு கேட்க வேண்டியது ராமதாஸ் தான்! ‘உன் அப்பன் வீட்டுச் சொத்தையா கேட்கிறோம்…’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைப் பார்த்து 86 வயது முதியவர் பேசலாமா? ‘அவருக்கு வேலையில்லை…’ என்று முதலமைச்சர் சொன்னது மட்டும் தரக்குறைவான பேச்சா? உண்மை அதுதானே?அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தாயுடன் உறவு கொள்வதற்கு சமம் என்று மருத்துவர் ராமதாஸ் கூறினாரே?

மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்., இல்லையென்றால்.," அன்புமணி ஆவேசம்!

இது என்ன புனிதமான வார்த்தையா? பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரே? இது கேவலமான செயல் அல்லவா? மருத்துவர் ராமதாஸை ஜெயலலிதா சிறையில் அடைத்தபோது, மன்னிப்பு கேட்டீர்களே? அப்போது இந்த அன்புமணி ராமதாஸ் எங்கே இருந்தார்?

Tamil Nadu Cabinet sanctions large-scale investment projects across various industries - Manufacturing Today India

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

அப்போது இவர்களுக்கு அவமானம் ஏற்படவில்லையா? ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டதே?

அதற்கு என்றைக்காவது அன்புமணி பதில் சொல்லியிருக்கிறாரா?அதிமுகவுடன் கூட்டணி சேரும் போதெல்லாம் பல கோடிகளை பேரம் பேசி பெற்றதாக பாமக மீது குற்றச்சாட்டு எழுந்ததே? அப்போதெல்லாம் உங்களுக்கு அவமானம் ஏற்படவில்லையா ?

HC has said the State government has the right to curb online gambling: Anbumani Ramadoss - The Hindu

அன்புமணி ராமதாஸ். 

அறிக்கை அரசியல் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் வன்னிய மக்களுக்காக செய்த நல்லவற்றை பட்டியலிட முடியுமா? தேர்தல் நேரத்தில் பேரம் பேசவும், அதில் பலன் அடைய மட்டும் வன்னிய மக்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறீர்களே?

ராமதாஸ் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்! அன்புமணி உங்களுக்கு வெட்கமே இல்லையா!  | CM MK Stalin | DMK |

இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? கடந்த மக்களவை தேர்தலில் கடைசி வரை அதிமுகவுடன் பேரம் பேசிவிட்டு, இரவோடு இரவாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தீர்களே? இது எதற்காக என்று உங்களால் விளக்க முடியுமா அன்புமணி? இது கேவலமான விஷயம் என்று இன்றுவரை உங்களுக்கு தெரியவில்லையா?

தி.மு.க. தலைவராக தேர்வு- மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து | Anbumani Ramadoss wishes to MK Stalin

வேலையில்லாமல் ராமதாஸ் அறிக்கை விடுகிறார் என்பது உண்மை தானே. மக்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் இதுதானே? இதில் எங்கே தரக்குறைவு வந்தது? வன்னிய மக்களுக்கு துரோகம் செய்வது, சாதிய மோதல்களை ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு நீங்களும் உங்கள் தந்தையும் தான் முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அன்புமணி.

Tamil Nadu CM Stalin rejects PMK leader Ramadoss's 'baseless' allegations  of secret Adani meeting- The Week

இந்தியாவில் குறிப்பாக மாநில அரசியல் கட்சியில் தரம் தாழ்ந்த தலைவராக இன்றுவரை பார்க்கப்படுபவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தான் அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை அவர் பதில் சொல்லியதே இல்லை.

ஜெயலலிதா மீது அவர் வைத்த விமர்சனம் அதன் பிவர் ஜெயலலிதா காலில் விழுந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் துடித்த துடிப்பே அவர் மனைவியை விட்டு சமாதானம் பேச வைத்த சம்பவம், ஜெயலலிதா கூட கூட்டு வைக்க மாட்டேன் அப்படி கூட்டு வைத்தால் பெற்ற தாயுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு சமம் என்று சொல்லிவிட்டு மீண்டும் ஜெயலலிதா காலில் விழுந்து பதவி சுகம் அடைந்தது என தமிழக அரசியலில் மிக மோசமான தரம் தாழ்ந்த தலைவராக இன்று வரை பேசப்படுபவர் டாக்டர். ராமதாஸ் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று இணையதளத்தில் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதையும் படிங்க.!