chennireporters.com

மனித உயிர்களை கொல்லும் மணல் லாரிகள். மௌனம் காக்கும் கலெக்டர், மாமுல் வாங்கும் போலீசார்.

மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது திருவள்ளூர் நகரம் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  மணல் லாரிகளை ஏற்றி மனித உயிர்களை கொலை செய்ய கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் போட்ட உத்தரவால் தினம்தோறும் மனித உயிர்கள் செத்து மடிகின்றன என்கிற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பட்டரை பெரும்புதூர், ஈக்காடு, ஈக்காடுகண்டிகை போன்ற பகுதிகளில் புதுக்கோட்டையை சார்ந்த மணல் மாஃபியாக்களுக்கு குவாரி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் எந்த ஆட்சி அமைந்தாலும் மண், மணல் குவரி அனுமதி அவர்களுக்கு தான் வழங்கப்படும். அந்த மணல் மாஃபியாக்கள் வரைமுறை இல்லாமல் அரசு விதிமுறைகளை மீறி 24 மணி நேரமும் சவுடு மற்றும் மணலை கொள்ளையடித்து வருகிறது. மண் எடுத்துச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்லுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மண் ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனர்கள் அசுர வேகத்தில் லாரிகளை ஓட்டுவதால் நிறைய சாலை விபத்துகள் நடைபெறுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பாச்சூர் அருகே அரண்வாயல் அன்னை தெரேசா நகரை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்கிற பெண் கொசவன்பாளையத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அதிக மண் ஏற்றி வந்த டாராஸ் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார்.  உடல் பாகங்கள் கூழ் கூழாக சாலையில் சிதறிக்கிடந்தது.  இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

இந்த விபத்து குறித்து மாவட்ட நிர்வாகமோ போலீசாரோ எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. திருவள்ளூர் போலீசாரும்,ஆவடி மாநகர போலீசாரும் மணல் லாரி ஓட்டுனர்களிடம் மாமுல் வாங்குவதில் பெரும் போராட்டமே நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் போலீசார் லாரி ஒன்றுக்கு 200 ரூபாயும், ஆவடி மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செவ்வாப்பேட்டை போலீசார் லாரி ஒன்றுக்கு 300  ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை லஞ்சமாக பெற்று வருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு பத்து லோடு மண் ஓட்ட வேண்டும் என்று இலக்கு வைத்துள்ள லாரி ஓட்டுநர்கள் லாரியை வேகமாக  ஓட்டினால் 13 அல்லது 15 லோடு வரை மண் ஓட்டலாம் என்று இலக்கு நிர்ணயித்து வேகமாக இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது.

இந்த விபத்தை தடுக்க குறைவான வேகத்தில் வண்டி ஓட்ட வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்த வில்லை மாறாக மாமுல் வசூலிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தார்ப்பாய் போட வேண்டும், பிற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு இல்லாமல், அலுவலக நேரங்களில் மணல் லாரிகளை இயக்கக் கூடாது என்று எந்த உத்தரவும் போடவில்லை. போடாமல் மாவட்ட நிர்வாகம் மௌனமாய் இருக்கிறது.

இயக்குனர் இதுவரை அரசு விதிமுறைகளை மீறி மண் எடுத்துள்ள மணல் குவாரி உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூறு, நூற்றைம்பது அடி வரை ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்களை வைத்து மண் அள்ளுவதையும் தடுக்கவில்லை. அனைத்திற்கும் தலைமை பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் ஆல்.பி. ஜான் வர்கீஸ் திமுகவின் உடன்பிறப்பாகவே பணியாற்றி வருகிறார்.

யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, மனித உயிர்களைப் பற்றி கவலைப்படாமல் மணல் லாரிகளின் அத்து மீறலையும் கண்டிக்கவில்லை. மணல் மாஃபியாவின் கொள்ளையையும் மாவட்ட ஆட்சியர் இதுவரை தடுக்கவில்லை என்கின்றனர் அறப்போர் இயக்கத்தினர். குறைந்தபட்சம் அலுவலக நேரங்களில் இந்த மணல் லாரிகள் இயக்காமல் இருந்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்கின்றனர்.

சாமுண்டீஸ்வரி

பொதுமக்கள் சாமுண்டீஸ்வரி மரணத்திற்கு காரணமான லாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அவரது உறவினர்கள். சாமுண்டீஸ்வரிக்கு ஏற்பட்ட விபத்து போல மணல் கொள்ளையை தடுக்காத அதிகாரிகளின் வீட்டில் இந்த விபத்து நடந்தால் தான் இதை தடுப்பார்களா என்கின்றனர் சாமுண்டீஸ்வரியின் உறவினர்கள். மனித உயிரைப் பற்றி இப்போதாவது கவலைப்படுவாரா டாக்டர்  ஆல்.பி. ஜான் வர்கீஸ்.

இதையும் படிங்க.!