பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்த சிவன் அருள் ஐஏஎஸ்.திடீர் மாற்றம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS புதிய பத்திரப்பதிவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்த சிவன் அருள் வேளாண் கூட்டுறவு கடன் சங்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சிவன் அருள் தான் சுமார் கடந்த 4 ஆண்டுகளாக ஆவடி பத்திரப்பதிவு துறை பதிவாளராக பணியாற்றும் ஊழல் ராணி லஞ்சத்திற்கு பெயர் போன மல்லிகேஸ்வரிக்கு ஜால்ரா தட்டியவர். பக்க பலமாய் இருந்தவர்.
புதிய தலைவர் மல்லிகேஸ்வரியின் கொட்டத்தை அடக்குவார் என்று சொல்லுகிறார்கள் பத்திரப்பதிவு துறை வட்டார அதிகாரிகள்.
ஆவடி பத்திரப்பதிவு பதிவாளர் மல்லிகேஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையில் பல புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளது.
ஆவடியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக பல்வேறு புகார்கள் நிலுவையில் இருந்த வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மல்லிகேஸ்வரி பத்திரப்பதிவு துறை தலைவர் சிவன் அருள் பக்க பலத்துடன் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் திடீரென மாற்றப்பட்டுள்ளதால் மல்லிகேஸ்வரிக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்கின்றார்கள் புகார் அளித்தவர்கள்.
பட்டாபிராம் தண்டுரைபகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு நிலத்தை பதிவு செய்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் மல்லிகேஸ்வரி மீது புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது அவர் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மல்லிகேஸ்வரி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.