chennireporters.com

மூன்றாவது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்.

தமிழக அரசு பதவியேற்று மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக மன்னார்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது.

 

அதனை தொடர்ந்து ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்வளத் துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்- பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தி.மு.க. அரசு பதவியேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:- மனோ தங்கராஜ்- பால்வளத்துறை

டிஆர்பி ராஜா- தொழில்துறை

பழனிவேல் தியாகராஜன்- தகவல் தொழில்நுட்பத்துறை

தங்கம் தென்னரசு-நிதித்துறை

அமைச்சராக பதவி ஏற்று கொண்ட டிஆர்பி ராஜா ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்தார். ஆளுநர் மாளிகைக்கு வந்த அனைவருக்கும் ஆளுநர் ரவி தேநீர் விருந்து அளித்தார்.

இதையும் படிங்க.!