Chennai Reporters

டாக்டர் பட்டம் வாங்க சென்ற மாணவனை கடத்திய தஞ்சை போலீஸ்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவமதிப்பு தமிழ் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள், மூன்றாண்டுகள்,. ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சி படிப்பு முடித்த பல்கலை மாணவ, மாணவியர்களுக்கு பட்டமளிப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று தஞ்சைக்கு  சென்றிருந்தார்.

தமிழ் பல்கலைக்கழகத்தில் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பிற்கு எதிராகவும், மார்க்சியத்தை இழிவுபடுத்தியும்,. மத துவேசத்தையும், தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழக்கு எதிராக பேசி வருகின்ற ஆளுநரைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தஞ்சாவூரில் கருப்பு கொடி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற இருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஜி. அரவிந்தசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதால், அவர் உளவுத்துறை மற்றும் காவல் துறையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதேசமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு காலம் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற பல்கலை விழா அரங்கில் இருந்த இடதுசாரி சிந்தனையாளர் மாணவர் ஜான் வின்சென்ட் வேதா அவர்கள் உளவுத்துறை மற்றும் காவல்துறையினரால் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தனிமை அறையில் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர்களுக்கு தகவல் தெரிய வந்து, மாணவர்களை விடுவிக்க ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதன் விளைவாக இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஜி. அரவிந்தசாமிக்கு. தமிழ் பல்கலைக்கழக நிர்வாகம் பட்டம் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஜான் வின்சென்ட் வேதா அவர்களுக்கு முனைவர் பட்டத்தை தமிழ் பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள், மத்தியில் புரட்சிகர சிந்தனை உள்ள மாணவர் தலைவர்கள் அவமானப்படுத்தப் பட்டது மனித உரிமை மீறிய செயலாகும். தஞ்சை மாவட்ட மக்களின் சார்பில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக செயலை கண்டிக்கின்றோம். மாணவர் சங்கத்தை சேர்ந்த துரை.மதிவாணன் என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மாணவர் ஜான் வின்சென்ட் இடம் கேட்டோம் . அவர் நம்மிடம் நான் கல்வியியல் துறையில் முனைவர் பட்டம் படித்து முடித்து விட்டேன்.  கடந்த 2015 ஆம் ஆண்டு கல்வியை தொடங்கி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆய்வு படிப்பை முடித்து விட்டேன். இன்று பட்டமளிப்பு விழா என்பதால் கல்லூரிக்கு சென்றேன்.

அப்போது அடையாளம் தெரியாத சிலர் சபாரி உடை அணிந்த ஒருவர் வந்து என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.  அங்கு என்னை அடைத்து வைத்து நீ எந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதி துப்பாக்கி வைத்திருக்கிறாயா? கத்தி வைத்திருக்கிறாயா என்று எல்லாம் கேட்டு என்னை சோதனை செய்தனர். என்னிடம் எதுவும் இல்லை என்ன போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்று சினிமா பட பாணியில் காலை 9 மணியிலிருந்து மதியம் 12:30 மணி வரை 20க்கும் மேற்பட்டோர் என்னை விசாரித்தனர்.

திருவாரூர் எஸ் பி ,தஞ்சை டிஎஸ்பி ,ஏடிஎஸ்பி என பல அதிகாரிகள் யார் யார் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை. யாரும் அவர்களின் பெயர்களையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. என்னை முதலில் சோமசுந்தரம் என்கிற காவலர் தான் என்னை அழைத்துச் சென்றார். நான் ஏற்கனவே மாணவர் கூட்டமைப்பில் பதவியில் இருந்தேன் அப்போது என் மீது பதினைந்து வழக்குகள் இருந்தது .

அந்த 15 வழக்குகளிலும் நான் விடுதலை பெற்று விட்டேன் அவை அனைத்தும் சிறிய பெட்டி கேஸ் தான் என்று சொன்னார். கஷ்டப்பட்டு படித்த படிப்பின் பட்டத்தை பெற முடியாமல் போலீசார் திட்டமிட்டு என்னை எதற்காக அடைத்து வைத்தார்கள் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை .

இது தொடர்பாக நான் அவசர போலீஸ் 100க்கு புகார் அளித்திருக்கிறேன் என்று முடித்துக் கொண்டார். அது தவிர தமிழ்நாட்டில் இல்லாத புதிய கலாச்சாரத்தை கவர்னர்   கொண்டுவர முயற்சி செய்கிறார். அரசு விழாக்களில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளுக்கு மாறாக இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பத்து மணி அளவில் விழா தொடங்கியது.

விழா தொடங்கியதும் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் தேசிய கீதம் பாடினார்கள் அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்.  விழா சுமார் 12 மணியளவில் முடிந்திருக்கிறது.  விழா முடிந்தவுடன் மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் பாடியிருக்கிறார்கள்.  இது தமிழக அரசின் அரசு விழாக்களில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளுக்கு மாறாக இன்றைய பட்டமளிப்பு விழா நடந்திருக்கிறது. தமிழ்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அதிகாரிகள் மீது தமிழ் தாய் வாழ்த்தை தேசிய கீதத்திற்கு பிறகு பாடியதற்கு அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கிறார்கள் மாணவ கூட்டமைப்பினர்.

கடைசிவரை என்னை முனைவர் பட்டம் வாங்க விடாமலேயே போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர் வடிவேல் காமெடியை போல ஒரு போலீஸ்காரர் நீ இன்னுமா வீட்டுக்கு போகவில்லை என்று கேட்டது எனக்கு மிகப்பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

தமிழக காவல்துறையினர் கவர்னர் ரவிக்கு கூஜா தூக்க தான் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்களா என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் மாணவர்கள். தமிழ்நாடு ஆளுநர் தமிழக மக்கள் மக்களின் வரிப்பணத்தில் தான் சோறு சாப்பிடுகிறார் தேநீர் குடிக்கிறார் என்பதை தஞ்சாவூர் காவல்துறையினர் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் தஞ்சை ஆய்வு மாணவர்கள்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!