chennireporters.com

#Who is this Aarti? யார் இந்த ஆர்த்தி ? நடிகர் ஜெயம் ரவி வாழ்க்கையின் மறு பக்கம்..

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிகிறேன் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். அந்த தகவல் பற்றி சமூக வலைதளங்களில் பல செய்திகள் வெளியாகி சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

கல்பனா என்று ஒரு நடிகை. கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தன் சம்பாத்தியத்தில் வாங்கிய சென்னையின் முக்கியமான சாந்தோம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் இடத்தில் ஒரு பீச் ஹவுஸ் இருக்கிறது. அது வீடு அல்ல. அது ஒரு பங்களா….

நீங்கள் 80 கால படங்களை பார்த்தால் அதில் ஒரு வீடு வரும். மாடிப்படியோரமாக சுவற்றிலிருந்து ஒரு யானைத்தலை துதிக்கையை நீட்டிக்கொண்டிருக்கும். அந்த வீடு தான் கல்பனா ஹவுஸ். அதை ஷுட்டிங்குக்கு விட்டே பல கோடிகள் சம்பாதித்திருக்கிறார்கள். இங்கு வராத, நடிக்காத நடிகர் நடிகையே கிடையாது. வடக்கு முதல் தெற்கு வரை எல்லோரும் வந்திருக்கிறார்கள். மன்மதலீலை படத்தில் வரும்…

இந்த கல்பனாவுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் விஜயகுமார், மகள் ரஞ்சனி. மகன் விஜயகுமார் பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்தவர். ரஜினி அதே இன்ஸ்ட்டியூட்டில் சீனியர். 1977ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘ஒரு கோவில் இரு தீபங்கள்’ படத்தை இயக்க இருக்கிறார். அப்போது புதுமுகங்களுக்கான ஸ்க்ரீன் டெஸ்ட் சென்னையில் நடந்தது.

இந்த ஸ்க்ரீன் டெஸ்ட்டில் ரங்கராஜ் என்கிற வாலிபர் கலந்துகொண்டார். வானம் பொழிகிறது பூமி விளைகிறது என சிவாஜி வசனங்களை பேச முத்துராமனோ உங்கள் நடிப்பை காட்டுங்கள். சிவாஜி போல் வேண்டாம் எனக்கூற இதோ வருகிறேன் என நழுவி விட்டார். அவர் தான் பின்னாளில் சத்யராஜ். சேகர் வெங்கட்ராமன் என்கிற வாலிபரை முத்துராமன் டெஸ்ட்டுக்கு அழைக்க அவரோ நமக்கு சினிமா சரிப்படாது எனக்கூறி தன் நண்பன் விஜயக்குமாரைப்பற்றி கூறுகிறார். விஜயகுமாரை சேகரே கல்பனா ஹவுஸில் வைத்து விதவிதமாக போட்டோ எடுத்து முத்துராமனிடம் அனுப்பி வைக்கிறார். முத்துராமன் விஜயகுமாரை செலக்ட் செய்கிறார். கல்பனா ஹவுஸ் வாடகையை குறைக்கலாம் என்பதற்காக இருக்கலாம்.

ஏற்கனவே ஒரு விஜயகுமார் நடிகராக இருப்பதால் விஜய் எனப்பெயர் மாற்றுகிறார்கள். அவரை அனுப்பி வைத்த சேகர் தான் பின்னாளைய S.Ve.சேகர். நாயகியாக சரோஜா என்கிற அதே இன்ஸ்ட்டிடியூட் மாணவி. சுஜாதாவின் சகோதரி தான் சரோஜா என்கிற நடிகை என்கிற தகவலும் இருக்கிறது.

எல்.ஐ.சி.நரசிம்மன், விஜய், சரோஜா போன்றோர் நடித்த அந்த கருப்பு வெள்ளைப்படம் ‘ஒரு கோவில் இரு தீபங்கள்’ வெளிவந்ததே தெரியாமல் ஓடியே போய்விட்டது. எஸ்.பி.முத்துராமனே மறந்து விட்டார். படத்தோல்வியால் விஜய் நகைத்தொழிலுக்கு போய்விட்டார். அதிலேயே நல்ல வருமானம். சுஜாதாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். அனுயா, ஆர்த்தி. அதில் இரண்டாவது குழந்தை தான் ஆர்த்தி.

விஜயகுமாரின் சகோதரி ரஞ்சனி மலையாள இசையமைப்பாளர் கே.ஜே.ஜோய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கே.ஜே.ஜோய் அக்கார்டியன் வாசிக்கும் ஒரு கலைஞர். எம்.எஸ்.வியோடு ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் வாசித்திருக்கிறார். கீ போர்டை தென்னிந்திய சினிமாவில் முதன் முதலில் கொண்டு வந்தவர். கே.ஜே.ஜோய் மலையாளத்திரைப்படங்களில் நல்ல ஹிட் பாடல்களைக்கொடுத்தவர். லவ்லெட்டர், லிஸா, ஆராதனா போன்றவை அவரின் ஹிட் படங்கள். ஜோய்-ரஞ்சனி இருவருக்கும் ஐந்து குழந்தைகள். கடைசி காலத்தில் படுத்த படுக்கையாகி இவ்வருடம் ஜனவரி 15ல் ஜோய் காலமானார்.

கல்பனா ஹவுஸ் பாகம் பிரிந்தது முதல் ஷுட்டிங்குக்கு பயன்படுத்துவதில்லை எனத்தெரிகிறது. பல பேருக்கு பிரித்து வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். இன்றைய மதிப்பில் பலநூறு கோடி அந்த இடம் மட்டும். ஆர்த்திக்கு சுஜாதா ஜெயம் ரவியை பேசி மணம் முடித்தனர். சுஜாதாவுக்கு திரைத்துறையில் எல்லோரிடைமும் பழக்கம் உண்டு. சன் டிவியில் ஸ்லாட் வாங்கி சுஜாதா விஜயகுமார் சீரியல் தயாரித்துக்கொண்டிருந்தார். கண்மணி சீரியல் இவரது தயாரிப்பு தான். தனது தோழி குஷ்புவின் கணவர் சுந்தரை நாயகனாக்கி ‘வீராப்பு’ படத்தை தயாரித்தார் சுஜாதா. மருமகன் ஜெயம் ரவி கால்ஷீட் கொடுக்க சினிமாத்தயாரிப்பிலும் இறங்கினார். அடங்கமறு, பூமி, ஸைரன்…..

‘அடங்க மறு’ படத்தை சுஜாதாவும், கே.ஜே.ஜோயியின் மகன் ஆனந்த் ஜோயும் இணைந்து தயாரித்திருந்தனர். ஆனந்த் ஜோய் – சீரியல் நடிகை பவனி ரெட்டி காதல் முன்பே கிசுகிசுவாக வந்திருக்கிறது.

ஜெயம் ரவி பெரியக்குடும்பத்தின் மருமகன். ஆர்த்தி-ரவி இன்ட்டிமேட் ரசிகர்களும் அறிவார்கள். பலரும் விவாகரத்து செய்தியை வெளியிட்ட சபிதா ஜோஸப்பை சபித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.

 

இதையும் படிங்க.!