chennireporters.com

பாஜக பிரமுகரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஐம்பது லட்சம் சம்பளம் கொடுத்தது யார்.?

பி பி ஜி சங்கரை கொலை செய்ய 50 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு கூலிப்படையினருக்கு கொடுக்கப்பட்ட செய்தி தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது ஷங்கரை கொலை செய்ய பணம் கொடுத்தது யார் என்ற விபரத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

கடந்த ஒரு வருட காலமாக திட்டம் தீட்டப்பட்டு  மூன்று டீம்களாக பிரிக்கப்பட்டு டீம் ஒன்றில் 10 பேர் வீதம் துப்பாக்கி மற்றும் கத்தி கடப்பாறைகள் போன்ற ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருந்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது. தற்போது இந்த கொலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள இளைஞர்களுக்கும் ஷங்கருக்கும் எந்த விதமான முன் விரோதமுமோ பகையோ இல்லை. பணம் வாங்கிக் கொண்டுதான் கூலிக்கு கொலை செய்தார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர்(42), இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். கடந்த 28 ம்தேதி சென்னைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு தனது காரில் டிரைவருடன் சென்று கொண்டிருந்தார் பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது காரை வழிமறித்த மர்ம கும்பல் காரின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டு வீசியதையடுத்து காரின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.  தன்னை கொலை செய்ய வந்துள்ளார்கள் என்பதை அறிந்து உயிர் பிழைக்க காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடத் தொடங்கினார்.

இந்த நிலையில் அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று பிபிஜி சங்கரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் பிபிஜி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து கொலைக்கான காரணம் என்ன தொழில் போட்டியா? அரசியல் காரணமா என பல்வேறு கோணங்களில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்..

மேலும் அந்த பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்ட பிபிஜி குமரனின் நெருங்கிய நண்பர் பிபிஜி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிபிசி குமரன் கொலை செய்யப்பட்ட பாணியிலேயே பிபிஜி சங்கரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலரும், தொழிலதிபருமான பி பி ஜி குமரன் என்பவர் படுகொலை வழக்கில் தொடர்புடைய குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வைரம் என்பவரை பழிவாங்கும் நோக்கில் பி பி ஜி சங்கர் திட்டமிட்டு இருந்ததாகவும், இது குறித்து தகவல் அறிந்த வைரம் ஆதரவாளர்கள் பழி வாங்கும் விதமாக இந்த கொலையை செய்துள்ளதாக தெரிகிறது என்கின்றனர் போலீசார்.

மேலும் பி.பி.ஜி குமரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மனான மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன்   பிள்ளைப்பாக்கம் ஊராட்சி திமுக பிரமுகர் ரமேஷ் , வைரம், படப்பை குணா ஆகியோர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

 

பிபிஜி சங்கர் கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில் அவரது சொந்த கிராமமான வளர்புரத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எழும்பூர் 13 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒன்பது பேர் சரணடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் முன்னதாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக பட்டியலணி மாநில பொருளாளர் பிபிஜி சங்கர் கொலை செய்தது மிகப்பெரிய வருத்தத்திற்குரிய செய்தி சமூகவிரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி வெற்றி படுகொலை செய்யப்பட்டது.

கண்டனத்திற்குரியது கையாலாகாத திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டிப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறி வரும் குற்ற சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது.  பொதுமக்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு ஆக இருக்க வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

குற்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்று பதிவிட்டுள்ளார் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இனியும் இது போன்ற குற்றச்சம்பங்கள் நடக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!