chennireporters.com

பாஜகவில் கேசவ விநாயகம் தலையீடு இல்லாமல் இருந்தால் தமிழகத்தில் தாமரை மலரும்.

பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூரிய சிவா ஓ பி சி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  அவர் டெய்சி என்பவருக்கு போன் மூலம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.  இந்த நிலையில் அவரை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி வைப்பதாக அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.  இந்த நிலையில் திடீரென சூரிய சிவா கட்சியிலிருந்து விலகினார் அவர் தற்போது கடிதம் ஒன்றை அண்ணாமலைக்கு எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

 

திருச்சி சூர்யா அண்ணாமலைக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர், “அண்ணாமலை அவர்களே, நீங்கள் தமிழக பாஜக கட்சிக்கு கிடைத்த மிக முக்கிய பரிசாவீர்கள். நீங்கள் நிச்சயம் 2026யில் தமிழக முதலமைச்சராவீர்கள்”. கடந்த சில மாதங்களாக உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட தேர்வு செய்யப்படலாம். இந்திய அரசியலில் உங்களின் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.


எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் அவர்களே., இனியாவது கட்சியில் உள்ளவர்களை நம்ப முயற்சியுங்கள். உங்களின் தலையீடு இல்லாமல் என் தலைவர்(அண்ணாமலை) பல அற்புதங்களை நிகழ்த்த கூடியவர்.

மக்களுடைய தலைவரை சுதந்திரமாக செயல்படவிடுங்கள். காயத்ரியை வைத்தும் டெய்சியை வைத்தும் உங்களுடைய விளையாட்டை இங்கு ஆடாதீர்கள். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் இருவரும் அண்ணாமலையின் வழியில் வராதீர்கள். எப்பொழுதும் சகோதரர் அண்ணாமலையின் அன்புடன் – சூர்யா சிவா.” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. திருச்சி சூர்யாவின் கடிதத்தால் பாஜக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!