chennireporters.com

நோய் பரப்பும் பாஸ்ட் புட் மற்றும் பிரியாணி கடைகள்..

நடவடிக்கை எடுக்குமா அரசு?

ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது ஆனால் ஹோட்டல்,பாஸ்ட் புட் கடைகள், பிரியாணி, கடைகள் போன்றவை திறந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.பார்சல் மட்டும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.ஆனால் இது போன்ற கடைகளில் சாப்பாடு வாங்கி விற்கும் டெலிவரி பாய் கூட்டம் அதிகரித்து வருகிறது.

அது தவிர தனக்கு தேவையான உணவுகளை பார்த்து வாங்கிக்கொள்ள குழந்தை
களுடனும் குடும்பத்துடனும் பெண்களும் ஆண்களும் சம்பந்தப்பட்ட பாஸ்ட்புட் பிரியாணி கடைக்கு வந்து எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் கூட்டமாக நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி ,பூந்தமல்லி, பட்டாபிராம், திருநின்றவூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஸ்ட் புட் கடைகளூம் பிரியாணி கடைகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளூம் இயங்கி வருகின்றன.

பொதுமக்கள் கொரோனா காலத்தில் இந்த கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது.

கடையில் வேலை செய்பவர்களும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படும் தனது வியாபாரத்தை செய்து வருகின்றனர்.

திரும்புகிற பக்கமெல்லாம் ஃபாஸ்ட் புட் கடைகளில் சத்தங்களும் பிரியாணி குண்டா வை தட்டும் சத்தம் கேட்கிறது எனவே பொதுமக்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று உணவு வாங்குவதை அரசு தடுக்க வேண்டும்.

உணவு தேவைப்படுவோர் அந்த கடைகளில் உள்ள செல்போன் மற்றும் மெயில் ஐடிக்கு தகவல் தெரிவித்து உணவுகளைப் பெற்றுக் கொள்ள அரசு ஆணையிட வேண்டும் .

அது தவிர உணவுகளை தரமாக பாதுகாப்பாக வைக்காமலேயே பொதுமக்களுக்கு தயார் செய்து தருகிறார்கள்.

பாஸ்ட் புட் கடைகள் ஏராளமாக இருக்கிறது என்னதான் அரசு கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டாலும் இதுபோன்ற ஃபாஸ்ட் ஃபுட் பிரியாணி கடைகளில் நோய் பரவும் அபாயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா சுகாதார அதிகாரிகளை தொடர்புகொண்டு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் பாதுகாப்பு கவசங்களை பின்பற்றாத கடைகளுக்கு கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க.!