#IPS officer suspended; பாலியல் புகார். ஐபிஎஸ் அதிகாரி பணி நீக்கம்.

February 15, 2025

By இரா. தேவேந்திரன்.

 பாலியல் புகாரில் சிக்கிய சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் ஐபிஎஸ்  அவர்களை டிஜிபி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.மகேஷ்குமார் ஐபிஎஸ் பணியிடைநீக்கம்

மகேஷ்குமார் ஐபிஎஸ் பணியிடை நீக்கம்.
பாலியல் புகாரில் சிக்கிய சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்ய காரணம் என்ன என்று காவல் துறையில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை காவல் துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார் ஐபிஎஸ். இவர் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர் இருவர் தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தனர். அந்த புகாரில் இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் ரீதியாக தங்களை சில தினங்களாக தொந்தரவு கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

Witness in the Corridors Bureaucracy News: Mrs. Seema Agarwal IPS has been transferred as DG Civil Supplies, Tamil Nadu Policeடிஜிபி சீமா அகர்வால்

இதையடுத்து, பெண் காவலர்களின் புகாரின் அடிப்படையில் டிஜிபி உத்தரவின் பேரில் டிஜிபி சீமாஅகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் விசாகா கமிட்டி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் காவலர்கள் கொடுத்த புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை அறிக்கையும் டிஜிபி அலுவலகத்தில் விசாகா கமிட்டி சமர்ப்பித்தது.

அதில் பாதிக்கப்பட்ட பெண் போலிசார் மகேஷ் குமார் தங்களிடம் பாலியல் உறவைக் கோருவதாக அவர்கள்கள் குற்றம் சாட்டினார். அவர் தனது திட்டத்தை நிராகரித்தபோது, அவர் குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் அவர் தொடர்ந்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், உடல் ரீதியாகவும் அவர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவர் தனது புகாருக்கு ஆதாரமாக இருவருக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப்பின் ஸ்கிரீன் ஷாட்களையும் கொடுத்துள்ளனர்.

பாலியல் புகார்: போக்குவரத்து காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம் - Sathiyam TVஅதன் அடிப்படையில் போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார் ஐபிஎஸ்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மகேஷ் குமார் ஐபிஎஸ் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பிறகு டிஐஜி பதவியில் தற்போது பதவி வகித்து வருகிறார். இதற்கு முன்பு சென்னை தெற்கு மாவட்ட போக்குவரத்து இணை ஆணையராக இருந்த நிலையில் சமீபத்தில் தான் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டிருந்தார்,

ஜாபர் சாதிக் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது ஏன்? - தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்! | Why did jaffer sadiq take a photo with him tamil nadu dgp shankar jiwal ...டிஜிபி சங்கர் ஜிவால்.

மேலும் கடந்த சில நாட்களாகவே இணை ஆணையர் மகேஷ் குமார் மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. மேலும் மகேஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போல் மற்றொரு பெண் அதிகாரியும் மகேஷ் குமார் மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பாலியல் புகாரில் காவல்துறை இணை ஆணையர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகேஷ் குமார் ஐபிஎஸ் அவர்களுக்கு மாதவரம் மற்றும் செங்குன்றத்தில் பணியாற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் இரண்டு பேர் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

இரா. தேவேந்திரன்.

February 19, 2025

Leave a Comment