#Ivan Shankar Raja; காஃபாவுக்கு வாருங்கள் தந்தையே!.. இளையராஜாவுக்கு இவன் சங்கர் ராஜா அழைப்பு.

December 22, 2024

By இரா. தேவேந்திரன்.

இசைஞானி இளையராஜா சாமி கும்பிடச் சென்ற கோயிலில் கருவறைக்குள் உள்ளே விடாமல் தடுத்த விவகாரத்தில் சமூக வலைத்தளத்தில் பலர் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய மகன் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய அப்பாவிற்கு மனம் திறந்த கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இளையராஜாவிற்கு உண்மையை எடுத்துரைக்கும்  மகன் யுவன் சங்கர் ராஜா

இளையராஜா கருத்துக்கு மகன் யுவன் சங்கர் ராஜா பதிலடியா? புகைப்படத்துடன் கவனம்  ஈர்த்த வார்த்தைகள் - லங்காசிறி நியூஸ்

கோடிகளை கொட்டி
கோபுரத்தை அமைத்தார் என் தந்தை…

கோடிகளை கொட்டினாலும்
கோடியில் நிற்க வைத்தது பார்ப்பனியம்.!

திருவாசகம் அமைத்து
தெய்வப்பணி செய்தார் என் தந்தை…

திருவாசகமே படைத்தாலும்
நீ தீண்டத்தகாதவன் என்றது பார்பனியம்.!

இஸ்லாத்தை நான் ஏற்க
எதிர்ப்பு சொன்ன என் தந்தையே..

சூத்திரன், பார்ப்பனன் என்ற
பேதமெல்லாம் இங்கில்லையே.!

வாருங்கள்… தந்தையே.,..

உங்களையும்
நமது குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

கோடான கோடி மக்கள்
ஐந்து வேளை குழுமி நிற்கும் கஃபாவில்

முதல் ஆளாக
உங்களை உட்கார வைக்கிறேன்..!

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’

எனும் திருமந்திரத்தை
உரக்கச் சொல்லுங்கள்!

ஒதுக்குபவர் யாருமில்லை அங்கே…

நிமிர்ந்து சொல்லுங்கள்.!
“இறைவனைக் கண்டேன் அங்கே!”

என்னோடு வாருங்கள் தந்தையே
உண்மை இறைவனை காண்போம்–யுவன் சங்கர் ராஜா 

திமுக இளைஞரணி | Facebook

என்று யுவன் சங்கர் ராஜா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share:

இரா. தேவேந்திரன்.

December 22, 2024

Leave a Comment