chennireporters.com

#Jaffar Sait; தன்னை சுட்ட தன் வினை ; ஜாபர் சேட்டை துரத்தும் வழக்கு. காரணம் யார்?

ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், திடீர் திருப்பமாக ரத்து செய்த அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திடீரென அந்த உத்தரவை திரும்பப் பெற்றது. இந்த மாற்றம் குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பல செய்திகள் பேசப்பட்டு வருகின்றன.

தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..! | jaffer sait appointed DGP of Tamil Nadu Fire Department

2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020- ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

Kanimozhi is DMK's Parliamentary party leader - The Hindu

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2019-ம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் News in Tamil, Latest உயர் நீதிமன்றம் news, photos, videos | Zee News Tamil

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, “ஜாபர் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அவருக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதிர்ந்த அமலாக்கத்துறை.. ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! | Chennai High Court quashed the ED case against Jaffer Sait - Tamil Oneindia

இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இன்று (ஆக. 23) ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. வழக்கின் விளக்கங்களை பெற விசாரணையை ஆக.27-ம் தேதிக்கு  (இன்று )ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

M. Karunanidhi - Wikipedia

நீண்ட காலமாக நடந்து வந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திடீரென்று ஜாஃபர் சேட்டுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கி அடுத்த நாளே மீண்டும் அந்த தீர்ப்பை திரும்பப்பெற்றது ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பேச்சு பொருளாக எழுந்துள்ளது.

A much enlarged ED – what it means for fighting crime

திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஜாபர் சேட் கனிமொழியிடம் பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் அரங்கில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி பர்வீன், சொத்துக்கள் முடக்கம்..அமலாக்கத்துறை அதிரடி | ED action EX IPS officer Jaffar Sait's wife Parveen, assets frozen - Tamil Oneindia

திமுகவின் மூத்த நிர்வாகிகள் முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜாபர் சேட்டு திமுகவிற்கு செய்த துரோகத்தை எப்போதும் மறக்கவே முடியாது என்கிற ரேஞ்சுக்கு எல்லாம் பேசிய நாட்கள் உண்டு. தான் செய்த வினை தற்போது தன்னையே சுடுகிறது வழக்கும் விடாமல் துரத்துகிறது. திரை மறைவில் திமுக அரசு இருக்குமோ என்கிற பேச்சு ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க.!