chennireporters.com

#Muhammed Ziauddin Tribute! ஆக்ஸ்ஃபோர்டு நகரில் ஜி.யு.போப் சமாதியில் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் அஞ்சலி!

இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு நகரில் ஜி.யு.போப் சமாதியில் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் அஞ்சலி!தமிழுக்கு வளம் சேர்த்த ஜி.யு.போப் | George Uglow Pope

 

ஜி.யு.போப்.

40 ஆண்டுகாலம் தமிழுக்கு தொண்டாற்றிய பெருமகனார் ஜி.யு.போப் அவர்களின் கல்லறை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு நகரில் அமைந்துள்ளது.

1886ஆம் ஆண்டு திருக்குறளை The Sacred Kural என்று 1,330 குறள்களையும் முதன்முதலாக முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து திருக்குறளை உலகம் அறியச்செய்தவர். அதனாலேயே அது உலக பொது மறையாக புகழ் பெற்றது.#reading newspaper daily; தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு. - chennireporters.com

நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்.

தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களில் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

“திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற கூற்றின் உண்மை வடிவமாக திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழர்களின் உண்மையான ஆன்மீகம் மற்றும் அறக்கோட்பாடுகளை உலகெங்கும் பரப்பிய பெருமதிப்பிற்குரிய “மறைநூற் புலவர்” ஜி.யு.போப் அவர்களின் கல்லறையில் மேனாள் மாவட்ட நீதிபதியும், தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினருமான நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் மலர்க்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார்.

அருகில் அவரது மகனும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான மு.ஃபாசில் பேரறிவாளன் மற்றும் அவரது மகளும் சட்டக்கல்லூரி மாணவருமான மு. ஆதிரை ஆயிசா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு சட்டப் பல்கலைக்கழகத்தின் முதுகலை சட்ட மாணவர் ராம் ஆகாஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.

இதையும் படிங்க.!