கட்டிங்குக்கும் கமிஷனுக்கும் பேர் போன மடிப்பாக்கம் ஏசி புருஷோத்தமன் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.அந்த செய்தி குறித்து நாம் காவல்துறையில் உள்ள சில நேர்மையான உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். அதில் கிடைத்த தகவலை நமது வாசகர்களுக்கு அப்படியே பதிவு செய்கிறோம்.
சென்னை மாநகர காவல் ஆணையர்
மடிப்பாக்கம் உதவி ஆணையராக இருப்பவர் புருஷோத்தமன் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு பெண்ணை ஒரு வருடமாக பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருவதாக ஒரு செய்தி காவல் துறை வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
மடிப்பாக்கம் ஏசி புருஷோத்தமன்
அந்தப் பெண் தனக்கு தொடர்ந்து தொல்லை தந்தால் கமிஷனரிடம் புகார் அளிப்பேன் என்று சொன்னதும், எனக்கு மடிப்பாக்கம் உதவி ஆணையர் பதவியை வாங்கித் தந்ததே ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் தான் உன்னால் ஒன்னும் செய்ய முடியாது என்று கூறி, மேலும் கடும் தொல்லைகள் அளித்திருக்கிறார். தொல்லை பொறுக்க முடியாமல் சென்னை மாநகர காவல் ஆணையர் ராத்தோரிடம் சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
#The police who stole the jewels; இழவு வீட்டில் 36 சவரன் நகை திருடிய போலீஸ் பங்கு போட்ட ஏசி புருசோத்தமன். – https://www.chennaireporters.com/news/india/the-police-who-stole-the-jewels-ac-purushottaman-who-stole-36-pieces-of-jewelry-from-the-stolen-house-was-implicated-by-the-police/
புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. புருஷோத்தமன் அப்பெண்ணுக்கு தொடர் பாலியல் சீண்டல் செய்து வருகிறாராம். பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போகிறேன் என்று அப்பெண் சொன்னதும் அண்ணா நகர் துணை ஆணையர் வி.ஆர்.சீனிவாசன் விசாரணை செய்வார் என்று உத்தரவிட்டுருக்கிறார் கமிஷ்னர் ராத்தோர்.
மடிப்பாக்கம் உல்லாச அழகிகள்.
இது போக வசூல் செய்வது மட்டுமே புருஷோத்தமனின் வாழ்க்கை லட்சியம். இவர் வசூல் செய்வதும், இந்த பெண் புகார் உயரதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். என்கின்றனர் உளவுத்துறையினர்.மடிப்பாக்கம் மற்றும் மேடவாக்கம் பகுதிகளில் மோகன் என்பவர் அழகிய இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருகிறார். இது தொடர்பாக பலர் போலீசுக்கு தகவல் அளித்தனர். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மடிப்பாக்கம் உல்லாச அழகிகள்.
இந்த விபச்சாரம் புல்லாங்குழல் கொடுத்த புருஷோத்தமனின் தயவில் தான் நடக்கிறது என்று காலரை தூக்கி விட்டுக் கொள்கிறாராம் ஏஜென்ட் மோகன். இவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் செட்டிங், கட்டிங், துட்டிங் தான்.
கட்டிங் கொடுத்தால் கைநீட்டி வாங்கி விட்டால் காரியத்தை கட்சிதமாக முடித்து தரும் பேராற்றல் மிக்க பிதாமகன் தான் இந்த காக்கி சட்டை கதாநாயகன் புருஷோத்தமன். இவர் ஆவடியில் பணியாற்றும் போது இழவு வீட்டில் 36 சவரன் நகைகள் கொள்ளை போனதில் இவருக்கு பெரும் பங்கு உண்டாம்.
அது தவிர ஆவடி வெள்ளானூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் இருந்த பொழுது அவர் கையில் இருந்த தங்க காப்பு காணாமல் போனது அதற்கு காரணமும் இவர் தான் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.
இவர் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது இவர் ஆடிய ஆட்டமும் இவர் போட்ட வேசமும் சொல்லவே முடியாது மெகா சீரியல் போல பெரிய கதையாக இருக்கும் என்கின்றனர் அந்தப் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்கள். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்கள் குறித்து கமிஷனர் ரத்தோர் அவர்கள் பார்வைக்கு சென்றவுடன் உடனடியாக அந்த விஷயங்களை சரி செய்து தனக்கு அறிக்கையை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார்.
மேலும் அது போன்ற இல்லீகள் சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் கமிஷனர் பெயரை புருஷோத்தமன் கெடுத்து விடுகிறார். மேலும் தனது உயர் அதிகாரிகள் பெயரை டேமேஜ் செய்யும் வகையில் சில கிரைம் மற்றும் டுபாக்கூர் பத்திரிகையாளர்களிடம் பேசி மொட்டை கடுதாசி போல செய்தி சொல்வாராம் ஏ.சி. புருஷோத்தமன்.
ஏ.சி. புருஷோத்தமன்.
இந்த செய்தி குறித்து மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர் புருஷோத்தமன் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.