கண் பார்வைத் திறனை அதிகரிக்கும் கிவி பழம்.

May 28, 2021

By லீமா ஷாலினி

 

கிவி பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.இது உடலுக்கு மட்டுமல்ல மன நலத்திற்கும் பயன் தருகின்றது.ஒரு சிறிய முட்டை வடிவத்தில் சப்போட்டாவை போன்று தோற்றம் கொண்டது இந்த கிவி பழம்.

இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையை கொண்டது.இதில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது சிட்ரஸ் வகை பழங்களில் கிவி பழம் மிகவும் சுவை குறைவான தாக இருக்கும்.

ஆனால் இதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது.இது மருத்துவ குணம் வாய்ந்தது உடலுக்கு மிகச் சிறந்த பலன் தரும் பழம்.கிவி பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள், சத்துக்கள் உள்ளன.

சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ,இ, அதிகம் உள்ளது .இது தோல் நோய்கள், இதய நோய், புற்றுநோய் உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கும்.

கிவி பழத்தில் உள்ள நார் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைகட்டுப்படுத்துவதால் சர்க்கரை வியாதி நோய் குணமாகும்.கிவி பழத்தை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு கிவி மிகச்சிறந்த மருந்து ஆகும்.இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும் செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.

மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.கிவி பழத்தில் வைட்டமின் இ சத்து நிறைந்திருக்கிறது.

இந்த வைட்டமின் உடல் நலத்திற்கும் குறிப்பாக கண் பார்வை நலத்திற்கு மிகவும் பலன் தரக்கூடியது.கண் பார்வை மங்குதல் மாலைக் கண் நோய் போன்றவை வருவதை தடுத்து கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து கண் பார்வைத் திறனைப் அதிகரிக்கிறது.

எனவே கண்களில் நலம் காண கிவி பழங்களை அவ்வப்போதுசாப்பிடவேண்டும்.மலச்சிக்கலைப் போக்க இதனை ஒரு நாளைக்கு இரண்டு என்ற முறையில் நான்கு வாரம் சாப்பிட்டால் முற்றிலும் இப்பிரச்சினை குணமடையும்.

ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் எட்டு வாரத்திற்கு தொடர்ந்து இதனை சாப்பிட்டால் அதிக ரத்த அழுத்தம் குணமடையும்.நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் இந்த பழத்தை சாப்பிடலாம்.

கிவிப்பழம் இனிப்பு குறைவானது தான். என்றாலும் அதில் சர்க்கரை குறியீடின் அளவு மிகவும் குறைவுஅதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்ற பழங்களைப் போன்று கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால்நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்.

Share:

லீமா ஷாலினி

May 28, 2021

Leave a Comment