chennireporters.com

#kovilpatti rto; லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி கொள்ளையடித்த கோவில்பட்டி ஆர்டிஓ நெடுஞ்செழிய பாண்டியன்.

#exclusive story #special story

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருகே காலியாக சென்ற லாரியை வழி மடக்கி ஓட்டுனரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆர்டிஓ மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த செய்தி தூத்துக்குடி மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கடந்த ஐந்து வருடமாக வீரசிகாமணி கிராமம் தென்காசி மாவட்டம் எஸ் பி டி எர்த் ஒர்க்ஸ் என்னும் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறேன்.

நான் இன்று காலை சரியாக 12 மணி அளவில் ஆவல் நத்தம் விளக்கு பகுதி வழியாக எனது கம்பெனிக்கு சொந்தமான டிஎன் 76 நம்பர் 6827 என்ற எண் கொண்ட டிப்பர் லாரியில் எனது டிரைவருடன் சென்ற பொழுது எங்களது வாகனத்தில் எப் சி இல்லை என்று கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் அவர்கள் காலியாகச் சென்ற எங்களது வண்டியை தணிக்கை செய்தார்

அப்போது எங்களிடம் வண்டி ஓனர் யார் என்று விசாரித்தார்.  என்னிடம் இருந்த ரூபாய் 50 ஆயிரம் எனது பெரிய ஓனர் வேல்முருகன் என்பவர் எனது ஓனரான திருப்பதி குமார் அவர்களுக்கு கொடுப்பதற்காக நான் வைத்திருந்த வாடகை பணம் 50 ஆயிரம் ரொக்க பணம் செல் போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு எனது வாகனத்தை எடுத்து செல் என்று சொல்லிவிட்டு உனது ஓனரை என்னை வந்து பார்க்கச் சொல் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

கோவில் பட்டி RTO நெடுஞ்செழிய பாண்டியன்.

நானும் எனது டிரைவர் கிருஷ்ணனும் எனது கம்பெனிக்கு சென்று எனது ஓனரிடம் தகவல் சொல்லி அவரை கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றோம்.  பின் எனது ஓனர் ஆர்டிஓவிடம் செல் போன் மற்றும் ரூபாய் 50,000 பணத்தை திருப்பி கேட்ட பொழுது நான் கைப்பேசி மட்டும்தான் வாங்கினேன். பணம் வாங்கவில்லை நீங்கள் வாகனத்தை எங்களிடம் ஒப்படைத்தால் தான் செல்போனை திருப்பிக் கொடுப்பேன் என்றார்.

எனது ஓனர் காவல் நிலையத்தில் மனு கொடுப்பேன் என்று கூறினார். அதற்கு மனு கொடு பார்த்துக்கொள்கிறேன் என்றார். எனவே சமூகம் எனது மனுவைப் பெற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டி சமூகத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு மணிகண்டன் என்று கடந்த 13ஆம் தேதி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்த நிலையில் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து நெடுஞ்செழிய பாண்டியனின் புரோக்கர் செல்வம் என்பவர் வேல்முருகனை தொடர்பு கொண்டு பேசி முடித்து கொள்ளலாம் நீங்கள் புகார் எதுவும் தரத் தேவையில்லை என்று நெடுஞ்செழிய பாண்டியன் சார்பாக பேசியுள்ளார். புரோக்கரின் பேரத்திற்கு ஒப்புக்கொள்ளாத லாரி ஒனர் போலீசில் புகார் கொடுக்கச் சென்றனர்.

அங்கு பணியில் இருந்த காவலர் அதிகாரிகள் வெளியே போயிருக்கிறார்கள் பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். புகாரை வாங்காமல் சிறிது நேரம் கழித்து வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார் சிறிது நேரம் கழித்து மீண்டும் காவல் நிலையம் சென்றபோது பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் புகாரை வாங்கிக்கொண்டு இன்ஸ்பெக்டர் வந்ததும் தகவல் சொல்லுகிறேன் வாருங்கள் என அனுப்பி இருக்கிறார்

கொஞ்ச நேரம் கழித்து வேல்முருகன் செல்போனுக்கு லைனுக்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆர்.டி.ஒ மீது நீங்கள் கொடுத்த புகார் மீது எந்த வித நடவடிக்கை எடுக்க முடியாது அதிகாரிகளை  பகைத்துக் கொள்ளாதீர்கள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

மறுத்ததற்கு இன்ஸ்பெக்டர் வேல்முருகனை மிரட்டி உங்கள் மீது ஆர்டிஓ ஒரு புகார் கொடுத்திருக்கிறார். ஆர்டிஓ ஆபீஸில் பிடித்து வைத்திருந்த உங்களது லாரியை நீங்கள் திருட்டுத்தனமாக எடுத்துச் சென்று விட்டீர்கள் என்று புகார் கொடுத்திருக்கிறார்.

உங்கள் மீது நான் வழக்கு போடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த நிலையில் வேல்முருகன் சம்பந்தப்பட்ட இடத்தில் எச்பி பெட்ரோல் பங்க் இருக்கிறது. அந்த இடத்தில் சிசிடிவி இருக்கிறது. அந்த காட்சியை நீங்கள் ஆய்வு செய்து விட்டு நடவடிக்கை எடுக்கலாம். காலியாகச் சென்ற லாரியை வழிமடக்கி மிரட்டி எனது டிரைவரிடம் இருந்த செல்போனையும் சூப்பர்வைஸரிடம் இருந்த பணத்தையும் மிரட்டி வழிப்பறி கொள்ளை அடித்து சென்ற ஆர்.டி.ஒ லாரியையும் கம்பெனிக்கு அனுப்பி விட்டார்.

பிறகு பொய்யான ஒரு புகாரை அவர் என் மீது கொடுத்திருக்கிறார். அதேபோல கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்யுங்கள். நாங்கள் அங்கு சென்று லாரியை எடுத்து வந்தோமா என்று ஏதாவது வீடியோ பதிவு இருந்தால் எங்கள் மீது வழக்கு போடுங்கள் நடவடிக்கை எடுங்கள் என்று சொன்ன பிறகும் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து நேரில் புகார் கொடுத்தும் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி சட்டரீதியாக நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 58 ஆயிரம் ரூபாய் அந்த லாரிக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார் ஆர்.டி.ஒ நெடுஞ்செழிய பாண்டியன். இதில் வேடிக்கை என்னவென்றால் காலியாக இருந்த லாரியில் 5 டன் எடை கூடுதலாக எடுத்து சென்றதாக 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் போட்டிருக்கிறார் இந்த அப்பழக்கற்ற யோக்கியசிகாமனி.

 

காலியாக சென்ற லாரியை வழிமடக்கிய கோவில்பட்டி ஆர்டிஓ நெடுஞ்செழிய பாண்டியனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பாக அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!