chennireporters.com

சென்னை,காஞ்சி,திருவள்ளூர்,மாவட்டங்களில் காணாமல் போன ஏரிகள்.மழையில் சிக்கித் தவித்த சென்னை.

சென்னை மற்றும் திருவள்ளூர் , காஞ்சிபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றகணக்கான ஏரிகள், குளம், குட்டை, தாங்கள் போன்றவை பயன்பாட்டில் இருந்து வந்தன. ஆனால் தற்போது பெரும்பாலானவை ஆக்கரமிப்பு செய்யப்பட்டு மழைக்காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.

நீதிமன்றம் சுமோட்டாவாக இந்த பிரச்சினையை வழக்காக எடுத்து நீர் நிலைகளை காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  மேலும் ஆறப்போர் இயக்கம் காணாமல் போன நீர் நிலைகள் பற்றி ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய சென்னையில் இருந்த ஏரிகள். 96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளைக் காணவில்லை. இதில், சென்னையைச் சுற்றி இருந்தவை கணக்கில் எடுக்கப்படவில்லை.

இவற்றில், ஒரே ஒரு ஏரியாவது, இப்போது இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்.

1.நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,

13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்) வேளச்சேரியின் மொத்த பரப்பளவு 265 ஏக்கர் கொண்டது. ஆனால் தற்போது அது சுருங்கி, சுருங்கி 55 ஏக்கராக மாறியுள்ளது. இந்த புயல் மழை தாக்கத்தால் பெரும் சேதமடைந்தது வேளச்சேரி என்பது குறிப்பிட தக்கது. 
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி
(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லுக் குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் – ஸ்பர்டாங்க் ரோடு),
26.செம்பாக்கம் ஏரி,
27.சிட்லபாக்கம் ஏரி ,
28.போரூர் ஏரி,
29.மாம்பலம் ஏரி,
30.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
31. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
32. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்…..
33.ஆலப்பாக்கம் ஏரி,
34. வேப்பேரி,

35. விருகம்பாக்கம் ஏரி
(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
36. கோயம்பேடு
சுழல் ஏரி,
(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
37. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
என பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சித் தகவல்கள் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

1906-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில்
474 நீர்ப்பிடிப்பு நிலைகள்
(ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி
43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன. இதில் சென்னை மாநகரத்தில் எதுவுமே இல்லை.

இதையும் படிங்க.!