chennireporters.com

#Madhar sangam demands; பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை போதாது. மாதர் சங்கம் கோரிக்கை.

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கப் பொதுச் செயலாளர் ராதிகா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது. பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். பொள்ளாச்சி பாலியல் சம்பவம்- மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் | madhar sangam  protest against pollachi abuse caseகுற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கப் பொதுச் செயலாளர் ராதிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர் ராதிகா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பை முழுமனதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டுத் தொகை 8 பேருக்கு 80 லட்சம் தொகை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.பொள்ளாச்சி வழக்கு: இது பத்தாது.. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக முக்கிய  கோரிக்கை வைத்த மாதர் சங்கம் | Madhar Sangam General Secretary Radhika has  said that the compensation ...இந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும். அதேசமயம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்த இந்த வழக்கில் முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக அவசியமாகும்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடர்ச்சியாக இந்த வழக்குத் தொடர்பாக போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் நடத்தியதால் 4 வழக்குகள் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளுக்கு இப்போது வரை நாங்கள் நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். காவல் துறையின் அச்சுறுத்தல்களை எல்லாம் தாண்டி, அந்த அச்சுறுத்தல்களை துச்சமென மதித்து கடுமையான போராட்டத்தை தமிழகம் முழுவதும் நாங்கள் நடத்தினோம். நாங்கள் நடத்தி போராட்டத்துக்கான வெற்றியாக இந்த தீர்ப்பைக் கருதுகிறோம். நிச்சயமாக இதுபோன்ற தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்.

Pollachi sexual assault case: Coimbatore Mahila court holds all nine  accused guilty - The Hindu

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் நடக்கும்போது காவல் துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு வந்தபோது அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இந்த வழக்குகளை மூடி மறைப்பதற்கும், குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், ஆட்சியாளர்களும் மேற்கொண்டனர். ஆனால், அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதன் விளைவாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு - தண்டனை என்ன? - BBC  News தமிழ்நீதிபதி அளித்திருக்கும் இந்த தண்டனை மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் இன்னும் குறுகிய காலத்திலேயே இதுபோன்ற தண்டனைகள் வழங்கியிருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் வெளிவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். வழக்கின் தீர்ப்பு காலதாமதமாகியிருந்தாலும், தீர்ப்பு வரவேற்கப்படக் கூடிய தீர்ப்பாக அமைந்துள்ளது என்றார்.

இதையும் படிங்க.!