chennireporters.com

நாளை முதல் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு.

awin top

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது படி ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.அதனைத் தொடர்ந்து நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் விலை குறைப்பு நடைமுறைக்கு வருகிறது.தமிழக அரசின் புதிய அறிவிப்பின் படி ஆவின் நீல நிற ஒரு லிட்டர் பாக்கெட் ரூபாய் 40-க்கும் அரை லிட்டர் 20க்கும் கிடைக்கும்.

ஆவின் பச்சை நிற அரை லிட்டர் பால் பாக்கெட் ரூபாய் 22 க்கும் ஆரஞ்சு நிற அரை லிட்டர் பால் பாக்கெட் ரூபாய் 24 கிடைக்கும்.இளஞ்சிவப்பு பால் அரை லிட்டர் ரூபாய் 18 ரூபாய் 50 காசு கிடைக்கும். இவை அனைத்தும் நாளை தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் மற்றும் மற்ற கடைகளிலும் விற்பனைக்கு வரும்.

பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைக்கப்பட்டுள்ளது அதன்படி அட்டைதாரர்களுக்கு ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூபாய் 37 க்கும் அரை லிட்டர் ரூபாய் 18 ரூபாய் 50 காசு கிடைக்கும் பச்சை நிறமுடைய பால் அரை லிட்டர் ரூபாய் 21க்கும்ஆரஞ்சு நிறம் உடைய பால் ரூபாய் 23 க்கும் இளஞ்சிவப்பு நிறமுடைய பால் பாக்கெட் 18க்கும் கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் ஏற்கனவே அறிவித் திருந்தது.நாளை முதல் இந்த விலை குறைப்பு தொடங்கும்.

இதையும் படிங்க.!