chennireporters.com

#Nellai Gopal threatened a female official for money ; பட்டப்பகலில் பெண் அதிகாரியை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் நெல்லை கோபால் தலைமறைவு.

#Big story,  #RTO office story, #break inspector purnalatha news,  #fake reporter nelligopal news,  #nallaiyappa motors,  #FIR filed police station

அரசு அதிகாரியை வேலை நேரத்தில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய டுபாக்கூர் ரிப்போட்டர் நெல்லை கோபால் என்பவர் மீது பெண் அதிகாரி போலீசில் புகார் கொடுத்துள்ள சம்பவம் தமிழக RTO வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பூந்தமல்லி பிரேக் இன்ஸ்பெக்டராக  பூர்ண லதா என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் பணியில் இருந்த பொழுது அவரை பணி செய்ய விடாமல் ஒருமையில் பேசியதாகவும் தனக்கு மாதம், மாதம் லஞ்சம் தர வேண்டும் இல்லை என்றால் உங்களைப் பற்றி தவறாக எழுதுவேன் என்று நெல்லை கோபால் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து மிரட்டி வீடியோ எடுத்துள்ளார்.மேலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றால் மாதம் தோறும் எனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் அதை ஏற்கவில்லை. இருப்பினும் (RTI )தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பொதுநலனுடன் தொடர்பில்லாத மூன்று மனுக்களை அனுப்பி தேவையற்ற அலுவலகப் பணிச்சுமையை எனக்கு ஏற்படுத்தினார். அவர் பணம் சம்பாதிக்கும்  நோக்கத்திற்காக மட்டுமே RTI பயன்படுத்தி வந்தார்.பின்னர் ஜூன் மாதம் நமது அரண் என்ற பத்திரிகையில் என் புகைப்படத்தை வெளியிட்டு என்னை மிரட்டினார். அதற்கு நான் எந்தவித பதிலும் அளிக்காததால் கடந்த 27ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் நான் அரசு மைதானத்தில் மற்றொரு அதிகாரியுடன் சேர்ந்து வாகன ஓட்டுநர் தேர்வு நடத்திக் கொண்டிருந்த பொழுது நெல்லை கோபால் நேரடியாக அங்கு வந்தார். அப்போது அவர் என்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒருவரிடம் நான் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது பொதுமக்கள் முன்னிலையில் என்னை சத்தமாக திட்டி அசிங்கமாக பேசினார்.

நான் பத்திரிகையை துறையை சேர்ந்தவர் என்பதால் வீடியோ எடுக்க முழு அதிகாரம் உள்ளது என்றும் நான் அரசுப் பணியை தொடர  உன்னை விடமாட்டேன் தொடர்ந்து உனக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவேன் என்றும் என்னை மிரட்டினார்.

அவர் மிரட்டலால் நான் மக்கள் பணி செய்ய விடாமல் நேரிட்டது. அதனால் எனது அரசு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு பெண் என்பதால் அரசு மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அவர் என்னை அவமானப்படுத்தி சத்தமிட்டதால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே நெல்லை கோபால் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூர்ணலதா கொடுத்த புகாரில் கூறியுள்ளார். கடந்த 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Crime number 245/ 2026 u/s 132 , 351 (2) இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 132 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் சட்டபூர்வமான பணியை செய்து கொண்டிருக்கும் பொழுது அவரை தாக்குவது, பலவந்தமாக தடுப்பது அல்லது கொலை மிரட்டல் விடுப்பது ஆகும். இந்த குற்றத்திற்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என சட்டம் கூறுகிறது.

அதேபோல சட்டப்பிரிவு 351 (2) ஒருவரை பயமுறுத்தும் நோக்கத்தில் மிரட்டுவது, கொலை செய்து விடுவேன் என்று சொல்லுவது, உன் வீட்டை எரித்து விடுவேன் போன்ற விஷயங்களை சொல்லி மிரட்டுவது  இது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி குற்றமாகும்.  இதற்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம் என்று சட்டம் சொல்கிறது.

அலுவலக நேரத்தில் பட்டப்பகலில் பூந்தமல்லி பிரேக்கிங் இன்ஸ்பெக்டர் பூர்ண லதாவை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் பிராடு பத்திரிகையாளர் நெல்லை கோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை கோபால் தலைமறைவாகிவிட்டார். திருவேற்காடு போலீசார் தனிப்படை அமைத்து நெல்லை கோபாலை தேடி வருகின்றனர்.

எங்கள் இணையதளத்திலிருந்து எங்கள் அனுமதி இல்லாமல் யாரும் புகைப்படங்களை மறுபிரதி எடுப்பதோ அல்லது எங்களது செய்தியில் உள்ள கன்டன்ட்களை, கட் & காப்பி, பேஸ்ட் செய்வதோ சட்டப்படி குற்றமாகும். எங்கள் அனுமதி பெறாமல் எங்கள் செய்தியில் இருந்து எந்த விதமான ஒரு பகுதியை கூட எடுத்து கையாளக்கூடாது இது சட்டப்படி குற்றமாகும்.

இதையும் படிங்க.!