chennireporters.com

#News7 reporter; தனக்குத்தானே பிறந்தநாள் போஸ்டர் அடித்துக் கொண்ட நியூஸ் 7 ரிப்போர்ட்டர்.

திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு என்கிற பெயரில் நமது அலுவலகத்திற்கு  6ம் தேதி ஒரு புகார் கடிதம் வந்துள்ளது. அந்த புகார் கடிதத்தில் குறிப்பிடபட்டிருந்த செய்தியை நாம் நமது வாசகர்களுக்கு அப்படியே அளித்துள்ளோம். அது குறித்து உரியவர்கள் பதில் அளித்தால் அதையும் நாம் வெளியிட தயாராக உள்ளோம்.

நமக்கு வந்த அந்த கடிதத்தில் எந்த பெயரையும் குறிப்பிடாமல் திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர் சங்க கூட்டமைப்பு என்கிற பெயரில் அந்த கடிதம் நமக்கு வந்து சேர்ந்தது. அந்த கடிதத்தில் மேற்கண்ட செய்திகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

வணக்கம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டமாகவும், செங்கை எம்ஜிஆர் மாவட்டமாகவும் இருந்த காலத்திலிருந்து திருவள்ளூரில் பத்திரிகையாளர்களாக இருந்து கொளோச்சிய தினத்தந்தி சம்பந்தன், தினமலர் இறையரசன், மாலை முரசு மணி,  கதிரவன்பாஸ்கர ராவ், முரசொலி தென்னரசு,  நமது எம்ஜிஆர் ரவிச்சந்திரன், தினமணி குப்புசாமி ஆகியோர் காலத்தில் இருந்து தற்போது பிராடுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் திருவள்ளூரில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் தங்களை பெரிய பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் போலவும் தாங்கள் பெரிய ஜாம்பவான்கள் போலவும் நடந்து கொள்வது வழுக்கு தலையில் முடி முளைத்ததைப் போல உள்ளது.30 ஆண்டு காலத்திற்கு முன்னாடி நாயுடு சமூகத்தினர் வன்னிய சமூகத்தினர் நாடார் சமூகத்தினர் பத்திரிகையாளர்களாக இருந்தனர். அவர்களிடத்தில் தான் திருவள்ளூர் நகரம் அல்லது திருவள்ளூர் மாவட்டம் சிறை பட்டு கிடந்தது. ஆனால் இன்று எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள் எருமை மாடு மேய்த்தவர்கள்,  இன்னும் பல வேலை செய்தவர்கள் பத்திரிகை என்கிற ஆலமரத்தின் விழுதுகள் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் பெரும்பாலும் தலித்துகளாகவே இருந்து வருகின்றனர்.

இப்படி பொருளாதாரத்திலும் கல்வி தகுதியிலும் முன்னேறியவர்கள் கூட தங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடியது இல்லை போஸ்டர் அடித்துக் கொண்டதில்லை பேனர் வைத்துக் கொண்டதில்லை.

ஏன் தமிழ்நாட்டிலேயே 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ள ஒரே ஒரு நிருபர் தினகரன் நாளிதழின் நிருபர் ரகோத்தமன் கூட  தனக்கு பிறந்தநாள் கொண்டாடியது இல்லை. ஆனால் குற்ற வழக்கு பின்னணி உடைய நியூஸ்7 இல் பணியாற்றும் இந்த தரங்கெட்ட தம்பி தனக்குத்தானே போஸ்டர் ஒட்டிக்கொண்டும் பேனர் அடித்துக் கொண்டும் தற்பெருமை பேசி வருகிறார். இவர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் பத்திரிகையாளர்களை அடித்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூனியர் விகடனில் பணியாற்றிய நிருபர் தேவேந்திரன் என்பவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. அதில் முதல் குற்றவாளியாக திருப்பாச்சூரில் எருமை மாடு மேய்த்த சுதாகர் என்பவர் முதல் குற்றவாளியாகவும் நியூஸ்7 பணியாற்றும் தமிழன் என்பவர் இரண்டாம் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இப்படி குற்ற பின்புலம் உள்ளவர்கள் சமூகத்தில் பத்திரிகையாளர் என்கிற போர்வையை போத்திக்கொண்டு ஊரெல்லாம் மிரட்டி பிச்சை எடுத்து வரும் இந்த நபர்கள் மீது பத்திரிகை அலுவலகங்களும் அரசும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஒரே சமூகத்தினருக்குள் பிரிவினையை உருவாக்கி சாதி மோதலை உருவாக்கும் சில பச்சோந்திகள் இந்த ஃபிராடுகளுக்கு பக்கபலமாய் இருந்து அவர்களை ஊக்குவித்து வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே இது போன்ற அடக்குமுறைகளை ஒடுக்குமுறைகளை தற்பெருமையாக பேசிக் கொண்டு திரியும் இவர்கள் பற்றி தாங்கள் தங்கள் இணையதளத்தில் செய்தி வெளியிட வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக பிராடுத்தனம் செய்யும் டுபாக்கூர்களுக்கும், பிராடுகளுக்கும் எதிராக உங்கள் இணையதளம் மட்டும் தான் செய்தி வெளியிட்டு வருகிறது. அதற்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஈரோடு, கோயமுத்தூர், சேலம், தேனி சென்னை போன்ற பகுதிகளில் உள்ள பிராடுகளின் முகத்திரையை கிழித்த உங்களது சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் இணையதளத்திற்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க கூட்டமைப்பு., என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாடுவது ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பம் அதை பற்றி எழுதவோ விவாதிக்கவோ எங்களது இணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழிற்சங்கநிர்வாகிகள் பிறந்தநாள் குறித்து எழுதுவதற்கும் அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் எங்களுக்கு முழு உரிமை உண்டு.

எனவே அந்த நபர் அவர் பிறந்தநாளை கொண்டாடியதில் எங்களுக்கே எந்தவித ஆட்சியேபனையும் அல்லது விருப்பமோ அல்லது வெறுப்போ ஏதும் இல்லை. எங்களுக்கு வரப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் அதில் கூறப்பட்டுள்ள விஷயத்தை சுட்டிக்காட்டுவது மட்டுமே எங்களது கடமை.

மற்ற கருத்துக்களை வாசகர்களாகிய உங்களுக்கே அந்த உரிமையையும் வாய்ப்பையும் நாங்கள் வழங்கிகிறோம்.  அதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.

இதையும் படிங்க.!