திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ளது ராமன் கோயில் கிராமம்.
இந்த கிராமத்தில் சென்னாவரம் என்ற பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை
வாய்ந்த ஸ்ரீ பர்வத வர்தினி ஸமேத ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் என்கிற திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்து மக்கள் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாழடைந்து கிடந்த கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து செய்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று ஒரு வருடம் ஆனதால் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.இந்த விழாவில் கிராம மக்கள் தவிர சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த கோயிலின் சிறப்பம்சம் காசியில் உள்ள காசிவிசுவநாதர் கோயிலைப் போலவே சிறிய அளவில் லிங்கம் இருக்கும்.
அதாவது இரண்டரை அடி உயரமும் அரை அடி அகலமும் பச்சை நிறத்தால் லிங்கம் அமைந்திருக்கும்.அதைத்தவிர லிங்கத்தை சுற்றி பதினாறு பட்டைகள் இடம்பெற்றிருக்கும்.
உலகத்தில் எந்த லிங்கத்திலும் இதுபோன்ற 11 பட்டைகள் கொண்ட லிங்கமே இல்லை.
இந்த கோயிலில் அம்மன் சன்னதிக்கும் ராமலிங்கேஸ்வரர் சன்னதிக்கும் நடுவில் அமர்ந்து நாம் என்ன நினைத்து தியானம் செய்கிறோமோ அது விரைவில் நடக்கும் என்பது ஐ தீகம்.
அது தவிர அந்த காரியம் வெகுவிரைவில் நடக்கிறது என்று அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.link here:https://www.chennaireporters.com/news/complaint-letter-to-the-collector-seeking-action-against-the-sexual-scoundrel/
முன்னொரு காலத்தில் குசஸ்தலை ஆற்றங்கரையில் ஓரத்தில் ராமன் ஈசனை இந்த இடத்தில் வழிபட்டதாக சொல்கிறார்கள் இந்த கிராம முன்னோர்கள். அதனாலே இந்த கிராமத்திற்கு ராமன் கோயில் என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ராம லிங்கேஸ்வரருக்கு ஏகாதச ருத்ர லிங்கம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இன்று நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் பலர் ஈசனை வழிபட்டனர். இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கிராம முன்னோர்கள் பெரியவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.