chennireporters.com

பாலியல் சீண்டல் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு புகார் கடிதம்.

தாசில்தார் ரஜினிகாந்த்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு வருவாய்த்துறை மற்றும் காவல் துறைகளில் பாலியல் வன்முறைகள் இருந்து வருகிறது.இதுதொடர்பாக சிலர் வெளிப்படையாக புகார் அளித்து வருகின்றனர்.

ஒருசிலர் புகார் அளிக்காமல் தற்கொலைக்கு முயன்று வருகின்றனர்.தற்போது சர்ச்சையை இப்படி ஒரு செய்தி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.ஆவடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றியவர் ரஜினிகாந்த்.

இவருக்கு காஞ்சிபுரம் சொந்த ஊர் கருணை அடிப்படையில் வேலைக்கு வந்தவர். அடிப்படையிலேயே இவர் ஒரு சினிமா ஆர்வலர் சினிமா விரும்பி நடிகராக வேண்டும் இல்லை டைரக்டர் ஆகவேண்டும் என்பது இவரின் ஆசை.

இந்தநிலையில் தனது தந்தை இறந்துவிட தனது தந்தையின் வேலையை அரசு இவருக்கு வழங்கியது.தான் பணியாற்றும் எல்லா அலுவலகங்களிலும் அந்த அலுவலகத்தில் அழகாக இருக்கும் .

சில பெண் ஊழியர்களிடம் இவர் வழிந்து பேசுவதும் அவர்களை தன் வழிக்கு வர வைப்பதற்கு பல நெருக்கடிகளை தருவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பூந்தமல்லியில் ஏற்கனவே பணியாற்றிய போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

அதேபோல பொன்னேரியில் பணியாற்றியபோது ஒரு பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர் வருவாய்த்துறை சங்கத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது சங்கத்தினர் இனிமேல் இது மாதிரி நடந்து கொண்டால் சங்கம் தலையிடாது ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது தற்போது ரஜினிகாந்த் பொன்னேரி தாசில்தாராக பணியாற்றிய வருகிறார்.

இவர் ஆவடியில் பணியாற்றியபோது சில பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக திருவள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் சங்கம்.

சார்பில் கலெக்டர் ஆல் ஜான் வர்கீஸ் அவர்களுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது மேற்படி கடிதத்தின் நகலை முதல்வரின் தனிப்பிரிவு தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் உளவுத்துறை இயக்குனர்.

காவல் துறை இயக்குனர் மகளிர் ஆணையம் போன்ற அதிகாரிகளுக்கு இந்தப் புகார் கடிதத்தின் நகல் அனுப்பப்பட்டுள்ளது அந்த புகாரில் பெயர்கள் மாற்றப்பட்டு யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு புகார் கடிதத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பெயர்களை வெளிப்படையாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர் .பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள ஒரு பெண் ஊழியர் இன்னும் கூட இவரிடம் நல்ல நட்பில் இருக்கிறாராம்.

ஆவடி வட்டாரத்தில் உள்ள ஒரு பெண் ஊழியர் இரவு பணி பார்க்க வேண்டும் வரச்சொல்லுங்கள் என்று மழைக்காலங்களில் இவர் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் அப்படி ஒன்றும் கலெக்டர் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

நான் இரவு பணிக்கு வர மாட்டேன் அவர் என்னிடம் வம்பு வைத்துக் கொண்டால் செருப்பால் அடிப்பேன் என்று பதிலுக்கு தகவல் சொன்னதாக ஆவடி தாலுகாவில் உள்ள சில நேர்மையான ஊழியர்கள்.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சொல்லுகிறார்கள்.இப்படி இருந்தும் கூட ஒரு பெண் ஊழியரை கட்டாயப்படுத்தி நைட் டூட்டி பார்க்க வைத்து விட்டாராம்.

அது தவிர வருவாய் துறைக்கு சம்பந்தமே இல்லாத கோகுல் என்ற நபரை இவர் பினாமியாக வைத்துக்கொண்டு எல்லா விலங்குகளையும் கோகுல் மூலம்தான் ஆவடியில் நடத்தி வந்தாராம்.

சம்பந்தமே இல்லாமல் வாட்ச்மேன் ரகுராமனை ஏன் மாற்றினார் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அது தவிர இவர் பணிக்கு வந்ததும் சர்வேயர் சுமன் சர்வேயர் விஜயலட்சுமி ஆகிய இருவரையும் எந்தவித காரணமும் சொல்லாமல் உடனடியாக மாற்றியுள்ளார்.

இவர் செய்த பெரிய டீலிங் இருக்கே இந்த இரு சர்வேயர் களும் ஒத்துவரவில்லை என்று சர்வேயர்கள் சங்கம் தரப்பில் சொல்லுகிறார்கள்.ஆனால் இந்த இரண்டு சர்வே எண்களும் யோக்கிய சிகாமணிகள் அல்ல என்பது தனிக்கதை.

இதுகுறித்து ரஜினி தாசில்தாரிடம் நாம் அவரது கருத்தை அறிய அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் மீட்டிங்கில் இருப்பதாகவும் பிறகு தங்களிடம் பேசுவதாக தெரிவித்தார்.

அதன்பிறகு அவர் நம்மிடம் பேசவில்லை.வாட்ஸ்அப்பில் அனுப்பிய கேள்விகளுக்கு அவர் ஒரே வரியில் அனைத்தும் பொய் செய்திகள் என்று முடித்துக் கொண்டார் ரஜினி.

இதுவரை எந்தவிதமான பெரிய குற்றச்சாட்டுகளும் சிக்காமல் போவதற்கு காரணம் பாதிக்கப்பட்டுள்ள எந்த பெண் ஊழியர்களும் தைரியமாக கலெக்டரிடம் காவல்துறையிடம் புகார் அளிக்க முன் வராதது தான் காரணம் என்கிறார்கள்.

நேரடியாக புகார் அளித்தால் தன்னுடைய குடும்ப கௌரவமும் மானம் மரியாதையும் போய் விடும் என்று பலர் பயந்து கொண்டு ரஜினியால் பாதிக்கப்பட்ட எந்த பெண் ஊழியர்கள் புகார் தர முன்வருவதில்லை.

இதையும் படிங்க.!