காவல் நிலையத்திற்கு வந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவரை உட்கார வைக்காமல் அதிகாரத் திமிருடன் யூனிபார்ம் போடாமல் போதையில் மிரட்டி சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து நாம் விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல் அதிர்ச்சிகரமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி ஈக்காடு கண்டிகை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் ஊற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஞ்சாயத்து தலைவர் ராஜசேகரன் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் எங்கள் பகுதியில் உள்ள குடிநீரை பாழ்படுத்தும் விதமாக குடிநீர் பம்பு அமைந்துள்ள பகுதியில் கழிவுநரை ஊற்றுகிறார்கள் மற்றும் நீர்நிலை ஓடையிலும் 100 நாள் வேலை செய்யும் வேலை செய்யும் பகுதிகளும் ஊற்றுகிறார்கள். இதனால் எங்கள் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அருந்தும் குடிநீரில் கழிவு நீர் கலக்கும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் 100 நாள் வேலை செய்யும் போது துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் ஊற்றுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இனிமேல் எங்கள் ஊராட்சிக்குட்பட்ட உட்பட்ட பகுதியில் கழிவுநீரை ஊற்றாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் போர்வெல் சேதம் அடைய கூடாது என்று அதே பகுதியில் உள்ள மண்ணை எடுத்து அந்த போர்வெல்லை பாதுகாக்கும் வகையில் சீரமைத்துள்ளார். இது தொடர்பாக பிடிஓ அவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு மனுவும் அளித்துள்ளார். இந்த நிலையில் புல்லரம்பாக்கம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் பரமசிவம் சம்பந்தப்பட்ட ஈக்காடு கண்டிகை பஞ்சாயத்து தலைவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து கொலை குற்றவாளிகளை விசாரிப்பதை போல நிற்க வைத்து விசாரித்துள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம்
மேலும் ஒருமையில் பேசி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பேசியிருக்கிறார். இது தவிர திருட்டுத்தனமாக மணல் ஒட்டும் மாட்டுவண்டிக்காரர்களிடம் பிராடுத்தனமாக மதுவிற்கும் நபர்களிடமும் கஞ்சாவிற்கும் நபர்களிடமும் காசு வாங்கும் ரைட்டர் வீடியோ எடுத்துள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம்
அவரும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரை ஒருமையில் பேசியுள்ளார். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சப்இன்ஸ்பெக்டர் பரமசிவத்திடம் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கு மண் திருடுவதாக புகார் அளித்தது யார் என்று கேட்டதற்கு அது அவசர போலீஸ் 100 நம்பருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்
சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம்.
புகார் கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் விவரத்தை உன்னிடம் சொல்ல முடியாது. நீயே திருட்டுப் பையன் தானே என்று பேசியிருக்கிறார். ஆனால் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் குடிபோதையில் இருப்பதைப் போலவே அவரது பேச்சும் செயல்களும் இருக்கிறது. அவர் பேசி இருக்கும் வீடியோவைப்பார்த்தால் அது நன்றாக தெரியும். சப்இன்ஸ்பெக்டர் பரமசிவம் சினிமா படத்தில் வரும் பொறுக்கி போலீசை போல நடந்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு தங்கள் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் பற்றி கூட தகவல் தெரியாத சப்இன்ஸ்பெக்டர் யாரோ சில தொழிலதிபர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர்கள் கொடுத்த சில்லறையை வாங்கிக்கொண்டு பஞ்சாயத்து தலைவரை மிரட்டும் வகையில் பேசியிருக்கிறார். இது குறித்து பஞ்சாயத்து தலைவர் உயர் போலிஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மீது மனித உரிமை ஆணையத்தின் புகார் அளிக்க புகார் அளித்துள்ளார். அது தவிர அவர் மீது தனி வழக்காக பதிவு செய்யவும் பஞ்சாயத்து தலைவர் ராஜசேகரன் சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் நம்மிடம் தெரிவித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம்
சப்இன்ஸ்பெக்டருக்கு ஈக்காடு கண்டிகை கிராமத்தில் மண் கடத்தப்படுவதாக அவசர போலீஸ் 100ல் புகார் சொல்லப்பட்டது என்று சொன்ன சப்இன்ஸ்பெக்டர் அது குறித்த விவரத்தை பஞ்சாயத்து தலைவர் ராஜசேகரன் கேட்டபோது சொல்ல மறுத்துவிட்டார். பஞ்சாயத்து தலைவர் ராஜசேகரன் அவரது கிராமத்திற்கு சென்று விசாரித்த போது அவசர போலீஸ் 100க்கு யாரும் அது போன்ற எந்த புகாரும் தரவில்லை என்று தெரியவந்தது.
இதை அடுத்து சப்இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஈக்காடு கண்டிகை பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் அதாவது விஏஓ வை தொடர்பு கொண்டு பஞ்சாயத்து தலைவர் ராஜசேகரன் மீது திருட்டுத்தனமாக மண் கடத்தப்படுவதாக ஒரு பொய் புகார் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இன்ஸ்பெக்டரின் வற்புறுத்தலுக்கு செவி சாய்க்காத விஏஓ நான் அதுபோன்று எந்த புகார் தர மாட்டேன் என்று மறுத்துவிட்டு பஞ்சாயத்து தலைவர் ராஜசேகரை போனில் அழைத்து சப்இன்ஸ்பெக்டருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை உங்கள் மீது பொய்யாக ஒரு புகார் கொடுக்க சொல்லுகிறார் என்ற விவரத்தையும் பஞ்சாயத்து தலைவரிடம் சொல்லிவிட்டார் விஏஓ.
உடனே பஞ்சாயத்து தலைவர் ராஜசேகரன் பிடிஒவை சந்தித்து நடந்த சம்பவத்தை சொல்லி விளக்கம் அளித்து இருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக ஒரு குற்றவாளியை போல் மக்கள் பிரதிநிதியை நிற்க வைத்து ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல் குடிபோதையில் இருப்பவர்கள் எப்படி பேசுவார்களோ அப்படி பேசி காவலர் உடை அணியாமல் மிக ஒழுங்கினமாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்து ராஜசேகர் சட்டப்படி சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மீது மனித உரிமை ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க இருப்பதாக நம்மிடம் தெரிவித்தார்.
தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொது மக்களை அநாகரிகமாக நடத்தக்கூடாது. அவர்களை மதித்து கனிவுடன் அவர்களது புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் மீது போலீசாருக்கு அவமரியாதையும் போலீசார் மீது வெறுப்புணர்ச்சி வருவதைப் போல நடந்து கொள்ளக் கூடாது அப்படி நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாருக்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம்.
சமூகவிரோதிகளுடன் கூட்டு வைத்திருக்கக் கூடாது ரவுடிகளுக்கு ஆதரவாகவோ குற்ற செயல்கள் புரியும் நபர்களுக்கு ஆதரவாகவும் செயல்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட புல்லரம்பாக்கம் சப்இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஏடிஜிபியின் உத்தரவை துளி அளவு கூட மதிக்காமல் உயர் அதிகாரியின் உத்தரவை செயல்படுத்தாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ஒருமையில் பேசியும் குற்றவாளியை போல் நிற்க வைக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். சப்இன்ஸ்பெக்டர் பரமசிவம்.