தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்குடன் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைட்டில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.பட்டாபிராமில் அமைந்துள்ள டைடில் பார்க்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயர் அழுத்த மும்முனை மின்சாரம், மின் இயக்க வசதிகள், மின் தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், தீ மற்றும் பாதுகாப்பு வசதிகள், கட்டட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா 24 மணி நேரம் பாதுகாப்பு வசதிகள், உணவு மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
6000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணி புரியும் வகையில் பசுமை கட்டிடம் வழிமுறைகளின் படியும் கட்டப்பட்டுள்ளது. இந்த டைட்டில் பூங்கா மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியை சேர்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்று வட்டாரம் மற்றும் மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.திறப்பு விழாவின் போது பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பூங்காவில் தல ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் என்று குருசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக 18 புள்ளி 18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார். இந்த பெருங்குழும திட்டத்தின் மூலம் முதல் பகுதியாக 18.18 கோடி மதிப்பீட்டில் 13 .33 கோடி மானியத்துடன் வடிவமைப்பு மையம் மறு பொறியியல் பரிசோதனை கூட்டம் சேர்க்கை உள்ளிட்ட மையம் உள்ளிட்ட மேம்பட்ட பயிற்சி மையம் காப்புரிமை பதிவு மையம் நவீன பரிசோதனை மையம் போன்றவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் சுற்றியுள்ள 14 க்கும் மேற்பட்ட குருசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்பேட்டை சங்கத்தினரால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு உறுதி மூலம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் பொது வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குருசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இளம் தலைமுறை பொறியாளர்கள் கல்லூரி மாணவர்கள் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காலை 10 மணிக்கு டைடில் பூங்கா திறந்து வைப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் காலை 11:30 மணிக்கு பூந்தமல்லி வழியாக நெமிலிச்சேரி நெடுஞ்சாலை பைபாஸ் வழியாக முதலமைச்சர் பட்டாபிராம் வந்தடைந்தார். சாலை ஓரத்தில் நின்றிருந்த கட்சி தொண்டர்களை பார்த்து காரில் இருந்து இறங்கி நடந்து வந்து தொண்டர்களுக்கு கை அசைத்தார்.கட்சியினர் அவருக்கு சால்வை மற்றும் வேட்டிகளை வழங்கினர். சிலர் புத்தகங்கள் வழங்கினார்கள். அதன் பிறகு காரில் ஏறிய முதலமைச்சர் டைடில் பூங்கா பாலத்தின் கீழாக வந்து விழா மேடைக்கு சென்றார். பின்பு விழா முடிந்ததும், மீண்டும் வந்த முதல்வருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர், கோஷங்களை எழுப்பினர், தொண்டர்களுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
விழா துளிகள்.
- 11.33 மணிக்கு மேடைக்கு முதலமைச்சர் வந்தார்.
- தேசிய கீதம் பாடப்பட்டது. ரிப்பன் வெட்டினார்.
பின்னர் ரிமோட் மூலம் டைட்டில் பார் க் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் விழாவில் எதுவும் பேசவில்லை. - தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மட்டும் பேசினார் பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு விழா முடிக்கப்பட்டது.
- முதலமைச்சரை கான திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் கட்சி தொண்டர்கள் பொது மக்கள் என பலர் வந்திருந்தனர்.