தமிழ் துறையில் பணியாற்றும் நான்கு பேராசிரியர்களின் தன்மானத்தையும், சுயகவுரத்தையும் சீண்டும் வகையில் துறை தலைவர் நடந்து கொள்வது அவர்களை ஆற்றொண்ணா துயரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் என்ற திருக்குறளுக்கேட்ப மாநில கல்லூரியில் பணியாற்றும் ஒரு துறை பேராசிரியர் நடந்து கொள்கிறார் என்று நமது அலுவலகத்திற்கு ஒரு புகார் வந்தது. அதனை தொடர்ந்து நாம் பழமை வாய்ந்த மாநில கல்லூரிக்கு நேரில் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தினோம்.
180 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக இருப்பவர் முனைவர் சேகர் இவர் தனது துறையின் தன் கீழ் பணியாற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை ஆணவ போக்குடனும் சர்வாதிகார மனப்பான்மையுடனும் நடத்துகிறார் என்று குற்றம் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் 150 க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் இந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் தமிழ்த்துறை பேராசிரியர்களுக்கும் இடையே கலகம் செய்யும் வகையில் பேசி வருகிறார்.
அது தவிர மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் மனம் நோகும் வகையிலும் நடந்து கொள்கிறார் என்கிறார்கள் இது குறித்து பலமுறை கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமன் அவர்களுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதே போல உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனுக்கும் புகார் அனுப்பியுள்ளனர். அந்த புகாரின் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு பேராசிரியர் குறைந்தபட்சம் ஒரு கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்பது விதி ஆனால் தமிழ் துறை தலைவர் முனைவர் சேகர் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இதே மாநிலக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். அது மட்டுமல்லாமல் குறித்த நேரத்திற்கு வகுப்பிற்கு செல்லவில்லை என்று தனது துறை பேராசிரியர்களை ஒருமையில் பேசுவதும் அவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்கிறார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி தமிழ்த்துறை பேராசிரியர்களை வகுப்பிற்கு நேரில் வந்து அழைத்து சென்றால் தான் குறித்த நேரத்திற்கு பாடம் எடுக்க செல்ல முடியும் ஆனால் தாங்கள் மாற்றுத்திறனாளிகள் என தெரிந்தும் கூட வேண்டுமென்றே ஏன் குறித்த நேரத்திற்கு பாடம் எடுக்க போகவில்லை உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் படித்தவர்களைப் போல நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என பண்பு இல்லாதவரை போல பேசுகிறார் முனைவர் சேகர் என்கிறார்கள் தமிழ்த்துறை பேராசிரியர்கள்.
இவர் எதை செய்தாலும் யாரும் தட்டிக் கேட்கக் கூடாது என்கிற மனப்பான்மையில் பணியாற்றி வருகிறார் எதற்கெடுத்தாலும் நான் இந்த கல்லூரியில் சீனியர் எனக்குத் தெரியாததா உங்களுக்கு தெரியப்போகிறது ஒழுங்காக உங்கள் வேலையை பாருங்கள் என்று கேள்வி கேட்பவர்களை தனது சுடு வார்த்தைகளால் அவர்கள் வாயை மூட வைத்து விடுகிறார். ஆனால் இவர் செய்வது தான் சரி. தான் சொல்வது தான் சட்டம் என்று ஹிட்லரைப்போல நடந்து கொள்கிறார் என்கிறார்கள் மாற்றுத்திறனாளி மாணவர்கள்.
சென்னையில் எவ்வளவு கல்லூரிகள் இருக்கின்றன எதற்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநிலக் கல்லூரியை தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிறார் முனைவர் சேகர். மாநில கல்லூரியை தேர்ந்தெடுத்து படிப்பதினால் இவர்களுக்கு என்ன லாபம் ஏற்படப்போகிறது என்கிறார். ஏன் இங்கே வந்து ஆட்டு மந்தைகளைப் போல நிற்கிறார்கள் என்கிறார் முனைவர் சேகர்.
மாணவர்களுக்கும் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கும் முன்மாதிரியாக செயல்பட வேண்டிய முனைவர் சேகர் கண்மூடித்தனமாக மற்றவர்களை ஏளனமாக பேசுவது படித்த பேராசிரியருக்கு அழகல்ல என்கிறார்கள் சில கல்லூரி நிர்வாகிகள்.ஏற்கனவே மாநில கல்லூரியில் தமிழ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பழனி அவர்களிடம் இளங்கலை மற்றும் முதுகலை படித்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கும் ஒரு ஆசிரியர் பழனியய்யாவின் சிறந்த பண்புகளையும் அவரது பெருந்தன்மைகளையும் புகழ்ந்து சொல்லுகிறார். ஆனால் முனைவர் சேகர் அவர்களை நினைவு கூறும் வகையில் யாரும் சமூகத்திலும் அந்த கல்லூரியிலும் குறிப்பிடும்படி எந்த சம்பவங்களையும் குறிப்பிடவில்லை. உலகம் மிகப்பெரியது என்பதை தமிழ்த்துறை தலைவர் முனைவர் சேகர் நினைக்கவில்லை என்றே நமக்கு தோன்றுகிறது. இந்த செய்தி குறித்து தமிழ் துறை தலைவர் முனைவர் சேகர் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.