புதுடில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய அபுதாபியின் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகத் தனது கார் டிரைவருக்கு திரும்பி வந்து நன்றி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மாநாட்டில் பங்கேற்றது மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இளவரசர் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதில் வர்த்தக விரிவாக்கம், எரிசக்தி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு , நிதி ஒத்துழைப்பு மற்றும் மேற்கு ஆசியாவின் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர், நாடு திரும்பும்போது விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகத் தனது கார் டிரைவருக்கு திரும்பி வந்து நன்றி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வைரலான வீடியோ காட்சிகளில், விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இளவரசர் காரை விட்டு இறங்கி, அங்கு தனக்காகக் காத்திருந்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன்பின் அவர் விமானத்தை நோக்கி நடக்கத் தொடங்கியபோது, தனக்கு கார் ஓட்டிய டிரைவருக்கு நேரில் நன்றி தெரிவிக்கவில்லை என்பதை உணர்ந்தார். உடனடியாக பின்நோக்கி நடந்து வந்த இளவரசர், தனது காரின் அருகே சென்று டிரைவருக்கு கைகுலுக்கி, தனது அன்பான நன்றியைத் தெரிவித்தார். அவரது இந்த எளிய மற்றும் மனிதாபிமானப் பண்பு இணையவாசிகளின் மனங்களை வென்றுள்ளது.