#collect pongal revenue; பொங்கல் வசூல் வேட்டை கல்லா கட்டிய பிஆர்ஓ அஸ்வின் குமார்.

January 24, 2026

By ரா. ஹேமதர்சினி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலர் ,(PRO) வாக பணியாற்றி வருபவர் அஸ்வின் குமார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்திரிகை பெயரில் வசூல் வேட்டை!! - நாளைய வரலாறு

இவர் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளிடமும் பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று வசூல் வேட்டை நடத்தியது தொடர்பாக செய்தித் துறை இயக்குனருக்கும் அமைச்சர் வெள்ளை கோயில் சாமிநாதனுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் ஏபிஆர்ஓவாக பணியாற்றியவர் அதுமட்டுமல்லாமல் இவர் அதிமுக விசுவாசி முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் தான் இவருக்கு ஏ பி ஆர் ஓ வேலை வாங்கி தந்தார். அதுமட்டுமல்ல இவரது குடும்பமே அதிமுக விசுவாசி குடும்பம்.

திருவள்ளூர்  (PRO)  அஸ்வின் குமார்.

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகிற பொழுது முக்கிய பொறுப்புகளில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள்.  ஆனால் திமுக ஆட்சி க்கு வந்ததும் பல்வேறு முக்கிய பதவிகளில் அதிமுக விசுவாசிகளே செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே செயல்பட்டு வருவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.DMK has won 5 municipalities in Tiruvallur district. Captured | திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக அஸ்வின் குமார் ஐந்து மாதத்திற்கு முன்பு மாற்றலாகி பதவிக்கு வந்தார். வந்த நாள் முதல் தவணையாக தீபாவளி வசூல் வேட்டையை வெற்றிகரமாக லட்சங்களில் சுருட்டினார்.

செய்தித்துறை அமைச்சர் வெள்ளக் கோயில் சாமிநாதன்.

அதன் பிறகு பொங்கல் வந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள உயர் அதிகாரிகளை சந்தித்து பத்திரிகையாளர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும் என்று ஒரு பெரிய வசூல்வேட்டை நடத்தி புகுந்து விளையாடி ஒப்புக்கு சில பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செய்துவிட்டு கேது படிக்கத் தெரியாத டுபாக்கூர் பத்திரிகையாளர்களுக்கு கொஞ்சமாக கவனித்து விட்டு அனைத்தையும் சுருட்டி கொண்டாராம் பிஆர்ஓ அஸ்வின் குமார். இந்த செய்தி குறித்து திமுக ஆதரவாளர்கள் சிலர் செய்தித்துறை இயக்குனருக்கும் செய்தி துறை அமைச்சர் வெள்ளை கோயில்  சாமிநாதனுக்கும் புகாராக அனுப்பி உள்ளனர் என்று சொல்லுகிறார்கள் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் எழுத படிக்கத் தெரியாத கல்லாக்கட்டும் சில பத்திரிகையாளர்கள்.Collector Tiruvallur (@collector.tiruvallur) • Facebook

ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தில் பல சொதப்பல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் மற்றும் புகைப்படக்காரர் இல்லாமல் அலுவலக உதவியாளரே போட்டோகிராபராக செயல்பட்டு வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் அரசின் செயல் திட்டங்களை கிராமங்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக எடுத்துச் செல்ல வேண்டும் ஆனால் அந்த வேலையை திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த பிஆர்ஓ வும் செய்ததே இல்லை ஆனால் சில கிராமங்களுக்கு சென்றதாக போலியாக கணக்கெழுதி டீசல் போட்டதாக பல லட்சங்களை சுருட்டி தனது பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். அதேபோல அலுவலகத்திற்கு பேனா, பேப்பர், பென்சில் என பொருட்கள் வாங்கியதாகவும் பல லட்சங்களை சுருட்டுவார்கள்.

தவிர பணம் கொட்டும் துறைகளான பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, கனிமவளத்துறை, டாஸ்மாக் என எல்லாத் துறைகளிலும் மாதம் ஒரு கணிசமான தொகை பிஆர்ஓவுக்கு வந்துவிடும்.

திருவள்ளூரில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திருட்டு; விற்பனையாளர்களே கைவரிசை: 6 பேர் கைது

ஏற்கனவே அஸ்வின் குமார், இதே மாவட்டத்தில் ஏபிஆர்ஓ வாக வேலை செய்த காரணத்தினால் எந்த அதிகாரிகளை எப்போது சந்திக்க வேண்டும் எந்த அதிகாரிகள் கேட்டதும் தருவார்கள் என்பது நன்கு தெரிந்து வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை டாஸ்மாக் அதிகாரிகளிடம் சற்று கூடுதலாகவே வேட்டையிலிருந்து புகுந்து விளையாடி விட்டாராம். என்கிறார்கள் எப்போதுமே போதையில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள்.

Share:

ரா. ஹேமதர்சினி

January 27, 2026

Leave a Comment