சென்னை ரிப்போட்டர்ஸ்.காம் செய்தி எதிரொலி ; மேற்கு வங்கத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி இடமாற்றம்.
விழுப்புரம் மாவட்டம் பாண்டிச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் ரூபாய் 350 கோடி நிலத்தை குறைந்த மதிப்பில் தனியார் நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி இடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில் ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக இருந்த தமிழக முன்னாள் ஆளுநர் ரவி மற்றும் அதன் செயலாளர் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி ஆகிய இருவரும் செயல்பட்டு வந்தனர்.
இவர்கள் மீது ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் அருண் அம்பதி, பிரபு மற்றும் பாலமுருகன் ஆகியோர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தனர்.
அந்த புகாரில் ஆரோவில் பவுண்டேஷனில் நிர்வாக ரீதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி ஆகும். மத்திய அரசு நிர்வாகம் என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள இடம் என்பதால் அங்குள்ள நிலம் மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களை தமிழ்நாடு அரசு கவனித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அது மட்டும் இன்றி அமெரிக்கா, ரஷ்யா ,பிரிட்டன் , ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டினர் வந்து இங்கு தங்கி வசித்து வருகின்றனர். 
ஆரோவில் பவுண்டேஷனுக்கு சொந்தமாக 3,300 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் ஒரு சில நிலங்கள் தேவையில்லை என்று இவர்களே முடிவு எடுத்து தனியாருக்கு விற்பனை செய்துவிட்டனர். இந்த நிலம் பரிவர்த்தனையில் 16 ஏக்கர் நிலம் ஏறக்குறைய பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை தனி நபரிடம் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக குறைந்த விலை மதிப்பு உள்ள ஒதுக்கு புறமான இடத்தை வாங்கி இவர்கள் ஊழல் செய்துள்ளனர்.
ஆரோவில் பவுண்டேஷனில் உள்ள இடத்தை விற்க யாருக்கும் அனுமதி இல்லை இருப்பினும் ட்ரஸ்டின் தலைவர் என்கிற பொறுப்பில் உள்ள ஆளுநர் ரவி மற்றும் ஜெயந்தி ஐஏஎஸ் ஆகியோர் இருவரும் 2021ல் பதவி ஏற்றார்கள்.
ஆரோவில் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் ஏற்கனவே டிரஸ்ட் வாங்கிய நிலத்தை அடிமட்ட விலைக்கு தனியாருக்கு விற்று விட்டனர் இது ஆரோவில் பிரஸ்ட்க்கு மட்டும் நஷ்டம் கிடையாது தமிழக அரசுக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது ஏறக்குறைய 350 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆரோவில்.
தனி நபர்கள் ஆரோவில் பவுண்டேஷனில் ஒரு சதுர அடியை 16 ரூபாய்க்கு வாங்கி அவர்கள் ஒரு சதுர அடியை 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதாவது 38,400 மதிப்புள்ள ஒரு கிரவுண்ட் இடத்தை, ஏறக்குறைய ஒரு ஒரு கோடியே 44 லட்சம்(14,400,000) ரூபாயாக்கு விற்பனை செய்கின்றனர்.![]()
தனியார் ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஒரு கோடியே 43 லட்சத்து 61 ஆயிரத்து 600 ரூபாய் லாபம் அடைகின்றனர். இப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் பல ஊடல்கள் நடந்துள்ளது என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.
அதிமுகவை சேர்ந்த ஒரு விஐபிக்கு 10 ஏக்கர் நிலத்திலும் இன்னொருவருக்கு மூன்று புள்ளி ஐந்து ஏக்கர் நிலமும் மற்றும் ஒரு நபருக்கு ரெண்டு புள்ளி ஐந்து ஏக்கர் நிலமும் ஆர் என் ரவி தரப்பினர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
இதுகுறித்து நாம் நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
#rn ravi land scam; ஆளுநர் ஆர்.என் ரவி மீது ரூ350 கோடி நில ஊழல்.
அது தொடர்பாக ஆளுநர் ரவி ஜெயந்தி ஐஏஎஸ் அவர்கள் இந்த நில ஊழல் தொடர்பாக அவர்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் பதிவு செய்வதாக பதிவிட்டிருந்தோம். ஆனால் அவர்கள் இது தொடர்பாக எந்த அறிக்கையும் தரவில்லை. இது தொடர்பான செய்தியை நாம் தமிழக அரசின் முக்கிய அரசு செயலாளர் முதல்வர் அலுவலகம் வரை இந்த புகாரை நாம் அனுப்பி இருந்தோம். அதன் அடிப்படையில் திடீரென 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஊழல் செய்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு திடீரென மேற்கு வங்காளத்திற்கு ரவியை அதிரடியாக இடமாற்றம் செய்தனர்.
இதுகுறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி என்னன்னா என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம் ஆனால் இங்கு எதுவும் செய்ய முடியாது வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் என்பதைப் போல தனது எக்ஸ் தலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எனவே இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சிபிஐ விசாரணை கேட்கும் என்கிறார்கள் ஒரு சில உயர் போலிஸ் அதிகாரிகள்.
