chennireporters.com

#rabid dog; திருவேற்காடு நகராட்சியில் அதிகாரிகளை வெறி நாய் கடிக்குமா? கடிக்காதா?

திருவேற்காடு நகராட்சியில் அதிகரித்து வரும் வெறி நாய்கள் பொதுமக்கள் அச்சம். திருவேற்காடு நகராட்சியில் இரண்டாவது வார்டு சக்தி நகர் பகுதியில் ஜேனட் ஸ்கூல் அமைந்துள்ளது. அதன் அருகில் ஒரு வெறிபிடித்த நாய்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிக் கொண்டிருக்கிறது.

தினந்தோறும் இரண்டு மூன்று பேரை ஆவது கடிக்கிறது. அதுவும் சாதாரணமான கடி அல்ல சிறுத்தை, சிங்கம் கடிப்பதை போல தசைகளை அந்த அளவுக்கு குதறி எடுக்கிறது. எலும்பு முறிவு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. தெரு நாய் பிடிப்பதற்கு நகராட்சியில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருவேற்காடு நகராட்சி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளது. குறிப்பாக அதில் நோய்வாய்ப்பட்டு வெறி பிடித்த நாய்கள் அதிகம் அளவில் காணப்படுகிறது. திருவேற்காடு சுடுகாடு அருகில் அதாவது மென்மையான சுடுகாடு அருகில் குப்பைமேடு அதிகரித்துள்ள பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் அங்கேயே சுற்றித் திரிகின்றன. அந்த வழியாக போகிற பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

திருவேற்காடு நகராட்சியில் தூய்மைப் பணியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு |  Tamil News participated in the cleanliness drive in Tiruvekadu Municipality

சைக்கிளில் மற்றும் மோட்டார் பைக்குகளில் போகிற பொதுமக்களை நாய்கள் துரத்தி செல்கிறது. தேர்தல் நெருங்கி வர நேரத்தில் அதிகாரிகள் இந்த நாய்கள் பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் ஓட்டு கேட்டு வரும்போது பொதுமக்களும், நாய்களும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கடிக்கும் நிலை ஏற்படும் என்கின்றனர் திருவேற்காடு நகராட்சி நாயக்கடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.Rabies In Dogs: Symptoms, Transmission and Vaccineகுறிப்பு:

டில்லி அம்மாள் வயது-65 2/14 மகாத்மா காந்தி தெரு சக்தி நகர் திருவேற்காடு ஜானட் பள்ளி அருகில் இந்த முகவரியை சேர்ந்த டில்லி அம்மாளின் வலது மற்றும் இடது என இரண்டு கால்களிலும் கடுமையாக சிங்கம், புலி, சிறுத்தை கடிப்பது போல கடித்து வைத்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த டில்லியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மேற்படி டில்லியம்மாள் சந்தித்து நடந்தவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். இந்த நாய்கள் பிரச்சனை குறித்து திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொறுப்புள்ளவர்கள் சம்பந்தப்பட்ட செய்தி குறித்து அவர்களது விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!